சென்னை அபிராமபுரம் கே.வி.பி கார்டனில் சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அபிராமபுரம் காவல்துறையினர், கள்ளச்சந்தையில் மதுபானத்தை விற்று வந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், இவர்கள் கே.வி.பி கார்டன் பகுதியை சேர்ந்த செந்தில் ( 35), திவாகர் (23) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் திருவள்ளூர் மாவட்டம் நாவலூர் பகுதிக்கு சென்று மதுபானம் வாங்கி வந்து, சென்னையில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இவர்களிடமிருந்து 178 மதுபாட்டில்கள் மற்றும் 1500 ரூபாயையும் பறிமுதல் செய்ததோடு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.65 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல்!