சென்னையில் மாஞ்சா நூலைப் பயன்படுத்தி பட்டம் விடுவதற்கு சென்னை மாநகரக் காவல் துறை தடை விதித்துள்ளது. ஆனால், தடையை மீறி பல இடங்களில் மக்கள் மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விட்டுவரும் நிலையில், அவர்களைக் கைது செய்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை, திருவிக நகர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் மாஞ்சா நூலுடன் கூடிய பட்டங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருவிக நகர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று (ஜூலை.10) மாலை திருவிக நகர், நிலம் தோட்டம், இரண்டாவது தெரு பகுதியில் காவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது அக்மிலோ ரோகுஸ் (42) அவரது மகன் ஜெயன் ரோகுஸ் (21) இருவரும் தங்கள் வீட்டில் ஒன்பது மாஞ்சா நூல்கண்டுகளுடன் 50 பட்டங்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த திருவிக நகர் காவலர்கள், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பழனியில் கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை