சென்னை: பல்லாவரம் அடுத்த திருநீர்மலை 31ஆவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினரின் உறவினர் தினேஷ் (38). இவரும் இவரது நண்பர் சுகுமார் (32) ஆகியோரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள கடைகளில் மாமூல் வசூல் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு (மார்ச் 29) அந்த பகுதியில் உள்ள டீக்கடை, பிரியாணி கடைகளில் மாமூல் கேட்டுள்ளனர். அப்போது கடை உரிமையாளர்கள் பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த தினேஷ், கடையில் இருந்த பொருள்களை தள்ளிவிட்டு, கடையை அடித்து உடைத்து, தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து கடையின் உரிமையாளர் சிசிடிவி காட்சிகளோடு சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு - காதல் மனைவியை அடித்து கொன்ற கணவர் கைது