கடந்த இரு தினங்களுக்கு முன்பு அசுரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெற்றிமாறனுக்கும் தனுஷுக்கும் ட்விட்டரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனை மேற்கோள்காட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஸ்டாலின், முரசொலி அலுவலகத்தின் பட்டாவை ட்விட்டரில் பதிவிட்டு இது தனியாருக்குச் சொந்தமான நிலமென்றும் மருத்துவர் ராமதாஸ் பச்சையாக புளுகியிருக்கிறார் என்றும் பதிவிட்டிருந்தார். மேலும் கூடுதலாக ஒருபடி மேல போய் 'முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம் பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்' என்று ராமதாஸின் ட்விட்டுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
இதனிடையே, ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க. ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப்பதிவு ஆவணமும் மூல ஆவணங்களும்தான். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?
முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?
முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?" என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல், நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில்தானே? எனவும் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
-
1. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?
— Dr S RAMADOSS (@drramadoss) October 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">1. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?
— Dr S RAMADOSS (@drramadoss) October 19, 20191. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?
— Dr S RAMADOSS (@drramadoss) October 19, 2019
அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004இல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007இல் திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட நியாயவான்கள்தானே திமுக தலைமை என்று ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: 'முரசொலி நிலம் பஞ்சமி நிலமல்ல' - ராமதாஸுக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!