ETV Bharat / state

வடகிழக்குப்பருவமழையினால் 26 பேர் உயிழப்பு! - Four lakhs to the family of the deceased

வடகிழக்குப்பருவமழையின்போது உயிரிழந்த 26 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையில் 26 பேர் உயிரிழந்தனர்!

author img

By

Published : Nov 6, 2022, 1:06 PM IST

சென்னை: வடகிழக்குப்பருவமழைக்காலத்தில் 26 மனித உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன எனவும், நவம்பர் 5ஆம் தேதி பெய்த கனமழையின் காரணமாக 29 கால்நடை இறப்புகளும், 67 குடிசைகளும், வீடுகளும் சேதமடைந்துள்ளதாகவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் அறிவித்துள்ளது.

வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் 5ஆம் தேதி 37 மாவட்டங்களில் 4.84 மி.மீ. மழை பெய்துள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக 22.92 மி.மீ. பெய்துள்ளது. தமிழ்நாட்டில் பெய்த கன மழை 64.5 முதல் 115.5 மி.மீ. வரை பெய்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை காலத்தில் மொத்தம் 26 மனித உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், 5ஆம் தேதி மனித உயிரிழப்பு பதிவாகவில்லை. இறந்த நபர்களது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5ஆம் தேதி பெய்த கனமழையின் காரணமாக 29 கால்நடை இறப்புகளும், 67 குடிசைகளும் வீடுகளும் சேதமடைந்துள்ளன.

பெருநகரம் சென்னை மாநகராட்சியில் 5ஆம் தேதி கனமழை காரணமாக விழுந்த 66 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 6ஆம் தேதி விழுந்த 1 மரத்தை அகற்றும் பணிநடைபெற்றுவருகிறது.169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மழைநீர் தேங்கியதால் பாதிப்புக்குள்ளானப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி முடிய மொத்தம் 2,83,961 உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 648 இடங்களில் தேங்கி இருந்த மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளன. மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 819 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ளன.

வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 4 நாட்களுக்கான முன்னெச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் மூலமாக வரப்பெற்றுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிக்கு மட்டும் 17 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதர மாவட்டங்களுக்கு மொத்தம் 43 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்குக் கூடுதலாக தலா 2 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப்படை 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர். 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. இதுவரை 1070 கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக 417 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அதில் 268 தொலைபேசி அழைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளன. 149 தொலைபேசி அழைப்புகளை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குடிநீர் வழங்கும் ஏரி நிலவரம்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு விவரம்
இன்று காலை 8 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கத்தில் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்போது 20.89 அடி இருக்கிறது. தற்போது செம்பரம்பாக்கத்திற்கு 310 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 679 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

அதேபோல, செங்குன்றம் (புழல்) ஏரியின் மொத்த கொள்ளளவு 21.20 அடி, தற்போது 18.80 அடியாக இருக்கிறது. தற்போது செங்குன்றம் ஏரிக்கு 292 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 259 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது’ என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வடசென்னையைப் பாதிக்கும் வடகிழக்குப்பருவமழை; பெரிய அளவில் பாதிப்பு அடைவது ஏன்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.