1997ஆம் ஆண்டு டிவிஎஸ் லூகாஸ் நிறுவனம், கொய்டோ நிறுவனத்துடன் இணைந்து வாகனங்களுக்கு விளக்குகளை தயாரிக்கும் இந்தியா - ஜப்பான் லைட்டிங் நிறுவனத்தை தொடங்கியது. தற்போது இந்த நிறுவனம் மாருதி சுசுகி, டொயோட்டா- கிர்லோஸ்கர், ஹோண்டா, டாடா, யமஹா, இசுசு, நிசான் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களுக்கு விளக்குகளை தயாரித்து வழங்கிவருகிறது.
தொடக்கத்தில் இரண்டு நிறுவனங்களும் 50 விழுக்காடு பங்குகளை வைத்திருந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பு டிவிஎஸ் தனது 20 விழுக்காடு பங்குகளை விற்பனை செய்தது. தற்போதைய விற்பனை தொடர்ந்து ஐஜேஎல் நிறுவனம் முழுவதுமாக கொய்டோ நிறுவனம் வசம் செல்லும். இந்திய மோட்டார் வாகனத் துறை நீண்ட கால வளர்ச்சியை சந்திக்கவுள்ளதால் தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது தங்களது நீண்ட கால வளர்ச்சிக்கு உதவும் என்றும் கொய்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிவிஎஸ் நிறுவனம் அடுத்தபடியாக மின்சார வாகனங்களில் கவனம் செலுத்தவுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் வலுப்பெறும் - எம்பி. நவாஸ் கனி