ETV Bharat / state

'ரயில்வே அப்ரண்டிஸ் பணியில் தமிழர்களுக்கு முன்னுரிமை' - வேல்முருகன் வரவேற்பு - மத்திய அரசாங்க பணிகள்

சென்னை: "ரயில் பெட்டி தொழிற்சாலையில் உள்ள பணிகளுக்கு தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனும் ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு, தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி" என்று, வேல்முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார்

velmurugan
author img

By

Published : May 25, 2019, 7:14 PM IST

இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,

தமிழகத்திலுள்ள தொடர்வண்டித்துறை, அஞ்சலகம், வங்கிகள், பாதுகாப்புத் தொழில்துறை, வருமானவரி, உற்பத்தி வரி, சுங்கவரி அலுவலகங்கள், ஆவடி திண்ணூர்தி தொழிலகம், திருச்சி ராணிப்பேட்டை பிஎச்இஎல் தொழிலகங்கள், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, நெய்வேலி அனல் மின் நிலையம், வானூர்தி நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட மத்திய அரசுத்துறைகள், நிறுவனங்களில் 75 விழுக்காடு பணிகளை ஆக்கிரமித்திருப்பவர்கள் இந்தி பேசும் வடமாநிலத்தவரே. அப்படியிருக்க, மத்தியில் பாஜக மோடி அரசு அமைந்ததில் இருந்து இந்தப் பணிகளில், இந்தி பேசும் வடநாட்டவரைத் திணிப்பது வேகமெடுத்தது. இதை எதிர்த்து தொடர்ந்து போராடிவருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

மத்திய பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைக் களைய, மத்திய ரயில்வே தேர்வுக்கு வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களை எதிர்த்து இந்தாண்டு மார்ச்22 ஆம் தேதி சென்னை ஆவடி, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை - 2ஆவது பட்டாலியன் அலுவலகத்தை முற்றுகையிட்டோம். மேலும், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு, முழுக்க வடநாட்டவரையே பணியில் அமர்த்தியதை எதிர்த்தும் மாபெரும் போராட்டத்தை நடத்தினோம்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள முறைசாரா தொழில்கள் யாவற்றிலும் வடநாட்டவரே நிரப்பப்படுகிறார்கள். இதனை முறைப்படுத்தவும் தமிழக மத்திய அரசுப் பணிகளில் 90விழுக்காடு தமிழர்களுக்கே வழங்கப்பட சட்டம் இயற்றவும் வலியுறுத்தி தோழமை அமைப்புகளை ஒன்றுகூட்டி சென்னை கோட்டைக்கு மிகப் பெரிய பேரணியையும் நடத்தினோம். இந்நிலையில், சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பணிக்கு ஆளெடுக்கும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதில், அந்தப் பணிக்கு தமிழ்நாடு மாவட்டங்கள் தோறும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை ரயில்வேயின் இந்த அறிவிப்பானது, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொடர்ச்சியான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். இதனை முன்னுதாரணமாகக் கொண்டு, தமிழகத்தில் மத்திய அரசு சார்ந்த பணிகளில் 90 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்கப்பட சட்டம் இயற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏற்கனவே தமிழகத்திலுள்ள தொடர்வண்டித்துறை,அஞ்சலகம், வங்கிகள்,பாதுகாப்புத் தொழில்துறை,வருமானவரி, உற்பத்தி வரி,சுங்கவரி அலுவலகங்கள்,ஆவடி திண்ணூர்தித் தொழிலகம், திருச்சி,ராணிப்பேட்டை பிஎச்இஎல் தொழிலகங்கள், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை,நெய்வேலி அனல் மின் நிலையம், வானூர்தி நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் 75 விழுக்காடு பணிகளை ஆக்கிரமித்திருப்பவர்கள் இந்தி பேசும் வட மாநிலத்தவரே. அப்படியிருக்க, மத்தியில் பாஜக மோடி அரசு ஏற்பட்டதிலிருந்து இந்தப் பணிகளில், மேலும் மேலும் இந்தி பேசும் வடநாட்டவரைத் திணிப்பது வேகமெடுத்தது.

இதை எதிர்த்து தொடர்ந்து போராடிவருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. தமிழகத்திலுள்ள மத்தியப் பணிகள் யாவற்றிலும் கட்டாயமாக 90 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றே அந்தப் போராட்டம் தொடர்கிறது.

இப்படி வடமாநிலத்தவரை வலிந்து திணிக்க மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் முறைகேடுகளை அரங்கேற்றுகிறது. அப்படி மத்திய பணியாளர் தேர்வாணயத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைக் களைய, மத்திய ரயில்வே தேர்வுக்கு வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களை எதிர்த்து22.03.2019இல் சென்னை ஆவடி,தமிழ்நாடு சிறப்புக் காவல்படை - 2ஆவது பட்டாலியன் அலுவலகத்தை முற்றுகையிட்டது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு முழுக்க வடநாட்டவரையே பணியில் அமர்த்தியதை எதிர்த்தும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

தமிழகத்தின் மத்திய அரசுப் பணிகளில் வடமாநிலத்தவர் குவிக்கப்படுவதுடன்,இங்குள்ள முறைசாரா தொழில்கள் யாவற்றிலும் வடநாட்டவரே நிறைக்கப்படுகிறார்கள். அதற்காக தினமும் சாரி சாரியாக வடவர்கள் வந்து குவிகிறார்கள். இதனை முறைப்படுத்தவும் தமிழக மத்திய அரசுப் பணிகளில் 90விழுக்காடு தமிழர்களுக்கே வழங்கப்பட சட்டம் இயற்றவும் வலியுறுத்தி தோழமை அமைப்புகளை ஒன்றுகூட்டி சென்னை கோட்டைக்கு மிகப் பெரிய பேரணியையும் நடத்தியது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

இந்த நிலையில், சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பணிக்கு ஆளெடுக்கும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதில்,அந்தப் பணிக்கு, தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை ரயில்வேயின் இந்த அறிவிப்பானது, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொடர்ச்சியான போராட்டத்திற்குக் கிடைத்த தொடக்கநிலை வெற்றியாகும்.

இதனை முன்னுதாரணமாகக் கொண்டு, “தமிழகத்தின் மத்திய அரசு சார்ந்த பணிகளில் 90 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்கப்பட சட்டம் செய்க!” என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.