இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களைத் தொடர்ந்து காவல் துறையினரையும், பத்திரிகையாளர்களையும் கரோனா பெருந்தொற்று நோய் தாக்கியுள்ள சூழலில், தமிழக அரசு நேரடி செய்தியாளர் சந்திப்புகளைத் தவிர்க்க வேண்டும்.
அரசு சார்பில் தெரிவிக்க வேண்டிய செய்திகளை அறிக்கைகளின் வழியாக கொடுக்கலாம். மிகுந்த தேவை ஏற்பட்டால் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் காணொளி வழியாக செய்தியாளர் சந்திப்புகளை நடத்தலாம். ஊடகத்துறையின் அனைத்து பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் மனிதர்கள்தான்; அவர்களின் நல்வாழ்வும் முக்கியம் என்பதை உணர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.