ETV Bharat / state

'துரோகம் ஒழிக்கப்பட்ட நாளாக மே.23 கொண்டாடப்படும்..!' - டிடிவி தினகரன்

சென்னை: "தேர்தல் முடிவு வெளியாகும் நாளான மே.23ஆம் தேதியை துரோகம் ஒழிக்கப்பட்ட நாளாக, தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாட இருக்கிறது" என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

'மே 23ஐ நல்லுலகம் கொண்டாட இருக்கிறது'-டிடிவி தினகரன்
author img

By

Published : May 17, 2019, 3:15 PM IST

அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை நாம் படைக்க உள்ளோம். நெருக்கடிகள், அழுத்தங்கள், பொய் வழக்குகள் இவை அத்தனையும் எதிர்கொண்டு, அம்மா அவர்களைப் போலவே எதற்கும் அஞ்சாமல் முன்னேறிச் சென்று, தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 39 மக்களவைத் தொகுதிகளிலும், சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களிலும் நாம் தனி முத்திரை பதிப்போம்.

அத்தனை தொகுதிகளையும் சுற்றி வந்தபோது பெரியோர்கள், தாய்மார்கள், இளைஞர்கள், பாலகர்கள் என அனைத்துத் தரப்பினரும் இன்முகத்தோடு வரவேற்ற விதத்தில் தமிழ்நாட்டுடைய நாடித்துடிப்பை நன்கு உணர முடிந்தது. இந்தத் தேர்தலில் சோதனைகள் அதிகம் நமக்கு ஏற்பட்டிருப்பினும் மிகுந்த உற்சாகத்தோடும், வீரத்தோடும், வீரியத்தோடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பணியாற்றியது என்பது கள எதார்த்தம்.

அம்மாவின் கொள்கைகள் வாழவேண்டும். துரோகம் தோற்க வேண்டும் என்ற நம்முடைய எண்ணம் ஈடேறும் நாள் அருகில் வந்துவிட்டது. நாம் வெற்றிக் கோட்டினைத் தொட இருக்கிறோம். மே-23ஐ துரோகம் ஒழிக்கப்பட்ட நாளாக தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாட இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 17.05.19

மே-23ஐ துரோகம் ஒழிக்கப்பட்ட நாளாக தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாட இருக்கிறது.. தினகரன் அறிக்கை..

அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசியல் வரலாற்றில் புதியதோர் அத்தியாத்தை நாம் படைக்க உள்ளோம். நெருக்கடிகள், அழுத்தங்கள், பொய் வழக்குகள் இவை அத்தனையையும் எதிர்கொண்டு, 
அம்மா அவர்களைப் போலவே எதற்கும் அஞ்சாமல் முன்னேறிச் சென்று, தமிழகம்-- புதுச்சேரி உட்பட 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் நாம் தனி முத்திரை பதித்துள்ளோம். அத்தனை தொகுதிகளையும் சுற்றி வந்தபோது பெரியோர்கள், தாய்மார்கள், இளைஞர்கள், பாலகர்கள் என அனைத்துத் தரப்பினரும் இன்முகத்தோடு வரவேற்ற பாங்கின் மூலம் தமிழகத்தினுடைய நாடித்துடிப்பை நன்கு உணர முடிந்தது. இந்தத் தேர்தலில் சோதனைகள் அதிகம் நமக்கு ஏற்பட்டிருப்பினும் மிகுந்த உற்சாகத்தோடும், வீரத்தோடும், வீரியத்தோடும் "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்" பணியாற்றியது என்பது களயதார்த்தம்.  

 தற்போது, நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது, அதிலும் நாமே முன்னணியில் நிற்கிறோம். "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" என்பதை நாம் நிரூபிக்கப்போகிறோம். 
மே 23-- ல் தமிழக அரசியல் ஒரு புதிய தொடக்கத்தைக் காணப்போகிறது. துரோக கும்பலை அப்புறப்படுத்தப்போகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழப்போகிறது. அந்தளவுக்கு துரோக கும்பலை தமிழக மக்கள் அருவெறுப்பாக பார்க்கிறார்கள். ஆகையால், இந்த நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல்களில் நம்முடைய முழு உழைப்பை அர்பணித்திடுவோம். கவனம் சிதறாமல் ஒவ்வொரு வாக்கையும் "பரிசுப் பெட்டகத்திற்கு" கொண்டு வந்து சேர்ப்போம்.  
இரண்டாண்டு காலமாக தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் இந்த துரோக கும்பல் செய்த அக்கிரமத்திற்கும், ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்த  பெரும் துரோகத்திற்கும் சரியான பாடம் கிடைக்கப்போகிறது. உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பின் வலிமையால் அது சாத்தியமாகப் போகிறது. 
அம்மாவின் கொள்கைகள் வாழவேண்டும், துரோகம் தோற்கவேண்டும் என்ற நம்முடைய எண்ணம் ஈடேறும் நாள் அருகில் வந்துவிட்டது. நாம் வெற்றிக் கோட்டினைத் தொட இருக்கிறோம். மே-23ஐ துரோகம் ஒழிக்கப்பட்ட நாளாக தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாட இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.