ETV Bharat / state

எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் 10 பேரும் தண்டனை பெற போகும் காலம் நெருங்கிவிட்டது.. தினகரன்

author img

By

Published : Aug 15, 2022, 7:41 PM IST

எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் 10 பேரும் தண்டனை பெற போகும் காலம் நெருங்கிவிட்டது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தினகரன்
தினகரன்

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்சயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அவருடன் இருக்கும் 10 பேரும் தண்டனை பெற போகும் காலம் நெருங்கிவிட்டதாகவும், ஜனநாயக ரீதியாக தேர்தலில் நாம் வெற்றி பெறும் போது அதிமுக தானாக நம்மிடம் வந்து சேரும் என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் இன்று காலை நடைபெற்றது. அமமுக துணைத் தலைவர் அன்பழகன் மற்றும் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை நடைபெற்ற கூட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள், 2800-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இன்றைய பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் 14 வது தீர்மானமாக தலைவர் பதவிக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடத்த முடிவுசெய்யப்பட்டது. அமமுக தொடங்கப்பட்டதிலிருந்து தலைவர் பதவியில் யாரும் நியமிக்கப்படவில்லை. பல இடங்களில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன் சசிகலாவிற்காக தலைவர் பதவி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் எப்போது வந்தாலும் பதவி ஏற்றுக்கொள்ளலாம் என தெரிவித்திருந்த நிலையில், அடுத்த ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டிறுப்பது, சசிகலா அமமுகவிற்கு வர வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது.

கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், ஆர் கே நகர் வெற்றியை தவிர்த்து பெரிய வெற்றி எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. வரும் காலத்தில் அமமுக தான் ஜெயலலிதாவின் ஆட்சியை உருவாக்க இருக்கிறது. ஜெயலலிதாவின் லட்சியங்களை தொடர்ந்து நிலைநாட்டவுள்ள இயக்கம் அமமுக தான் எனவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மண்டலங்களிலும் பலம் பொருந்திய கட்சியாக, பிரதமரை தேர்வு செய்வதில் அமமுகவும் பங்கு வகிக்கும் என கூறினார்.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கட்டி காத்த அதிமுக என்ற இயக்கம் இன்று அல்லல்படுவதை காணும் போது வருத்தமாக உள்ளது. ஓ.பி.எஸ் தான் செய்த தவறை உணர்ந்துவிட்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் திருந்தமாட்டார். தனது சுயநலத்துக்காக எதையும் செய்யக்கூடியவர். ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் அதிமுக சிக்கியுள்ளது. எடப்பாடி உடன் இருப்பவர்கள் கூலிக்கு மாரடிப்பவர்கள். எடப்பாடியும் அவர் உடன் இருக்கும் 10 பேரும் தண்டனை பெறப்போவது உறுதி. தமிழ்நாட்டு மக்களை தொடந்து ஏமாற்ற முடியாது என பேசினார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. வழக்கில் எடப்பாடி வெற்றி பெற்றாலும் அதிமுகவுக்கும் இரட்டை இலை சின்னத்துக்கும் பழைய மரியாதை இருக்குமா? வழக்கில் வெற்றி பெற்றாலும், தேர்தல் ஆணையத்தில் வெற்றி பெற்றாலும் மக்கள் மன்றத்தில் அவர்கள் தோற்கப்போவது உறுதி. ஜனநாயக ரீதியாக நாம் தேர்தலில் வெற்றி பெற்றால், அதிமுக தானாக நம்மிடம் வந்து சேரும் என தெரிவித்தார்.

திமுக அரசு குறித்து பேச ஒன்றும் இல்லை என கூறிய தினகரன், முதலமைச்சர் ஸ்டாலினைவிட அவர் அப்பாவே மேல் எனவும், தமிழ், சமூக நீதி என சொல்லி மக்களையும் தொண்டர்களயும் திமுக ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கட்சியை கழற்றி விடும் எனவும் இரண்டு தேசிய கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியுடன் தான் கூட்டணி அமைப்பது உறுதி எனவும், பிரதமரை உருவாக்கும் தேசிய கட்சியுடன் அமமுக கூட்டணி வைக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாரிசு திரைப்பட காட்சி இணையத்தில் கசிந்தது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.