இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காவிரி டெல்டாவின் ஒரு பகுதியான புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இப்பிரச்னையில் ஏற்கனவே மக்களவையில் அளித்த வாக்குறுதியை மீறி, மத்திய அரசு நடந்து கொள்வது சரியானது அல்ல.
தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் நெடுவாசல் வருவதால், ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஹைட்ரோகார்பன் திட்டம் கூடாது என்பதே உறுதியான கொள்கை: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்