ETV Bharat / state

'நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே' - டிடிவி தினகரன் - may 1

சென்னை: மே தினத்தை முன்னிட்டு உழைப்பாளர்களை வாழ்த்தி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
author img

By

Published : Apr 30, 2019, 8:30 PM IST

மே தினத்தை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மே தினத்தையொட்டி உழைப்பாளர் தின வாழ்த்துக்கள். உழைப்பதற்குக் கிடைக்க வேண்டிய அத்தனையையும் தடையின்றி கொடுக்கிற சமூகமும், அரசும்தான் சிறந்ததாகத் திகழ முடியும் என்றும், சமீபத்திய ஆண்டுகளாக எல்லாவற்றுக்கும் போராடிக் கொண்டே இருக்க வேண்டிய நிலைக்கு உழைப்பவர்கள் தள்ளப்பட்டார்கள் என அதிமுக அரசை விமர்சிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒப்பந்த தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு, தூக்கி எரியும் நிலை இந்தியாவில் இருப்பதாக தெரிவித்துள்ள டிடிவி தினகரன், உடலுழைப்பு தொழிலாளர்கள் மட்டுமின்றி அறிவுசார் துறைகளில் உழைப்பவர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைப்பதில் தடையிருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

"உழைப்புச் சுரண்டலை எந்த இடத்திலும் அனுமதிக்காமல் உழைப்பவருக்கு எங்கும் முதல் மரியாதை என்பதை நடைமுறையாகவும் 'நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே' என்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் படப் பாடல் வரிகளை மெய்ப்படவேண்டும்." என்று அந்த வாழ்த்து செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தி அறிக்கை:

உழைப்பின் வலிமையால் இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உழைப்பாளிகள் தங்கள் உரிமைகளை போராடி வென்றெடுத்த இந்நாள் 'உழைப்பவரே உயர்ந்தவர்' என்பதை உரக்கச் சொல்லும் நாள். உழைப்பதற்கு கிடைக்க வேண்டிய அத்தனையையும் தடையின்றி கொடுக்கிற சமூகமும் அரசும் தான் சிறந்ததாக திகழ முடியும் சமீபத்திய ஆண்டுகளாக எல்லாவற்றுக்கும் போராடிக்கொண்டே இருக்க வேண்டிய நிலைக்கு உழைப்பவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஒப்பந்த தொழிலாளர் முறையை இருக்கக்கூடாது என்று உலகெங்கும் குரல் ஒலித்து வரும் நிலையில் அதனை வலுப்படுத்தி அவர்களின் உழைப்பை உறிஞ்சி விட்டு தூக்கி எறியும் வேலை ஒப்பந்தம் போன்றவற்றை இந்தியாவில் கொண்டு வந்திருக்கிறார்கள். உடலுழைப்பு தொழிலாளர்கள் மட்டுமின்றி மூளையால் உழைக்கிற அறிவுசார் துறைகளிலும் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் நிறைய தடைகள் இருக்கின்றன. அரசு தனியார் என்ற பேதமெல்லாம் இல்லாமல் எல்லா நிறுவனங்களிலும் உழைப்பவர்கள் கிடைக்க வேண்டிய அனைத்தையும் கிடைக்கச் செய்வதற்கு இந்த மே தினத்தில் உறுதியேற்போம். உழைப்புச் சுரண்டலை எந்த இடத்திலும் அனுமதிக்காமல் உழைப்பவருக்கு எங்கும் முதல் மரியாதை என்பதை நடைமுறையாகவும் 'நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே' என்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பட பாடல் வரிகளை மெய்ப்பிக்கும் உண்மையான உழைப்பு என்றைக்கும் வீணாகாது என்பதற்கிணங்க உழைப்பவர்களின் கனவுகள் அனைத்தும் நனவாக நெஞ்சம் நிறைந்த மே தின வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.