சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தின் பெயர்ப்பலகையில், பெருந்தலைவர் காமராஜரின் பெயரை மீண்டும் வைப்பது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில் கூறியதாவது,
“சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு, ஏற்கெனவே இருந்த பெருந்தலைவர் காமராஜரின் பெயரை மீண்டும் வைப்பதில் காட்டப்படும் தயக்கம் வருத்தமளிக்கிறது.
இதுதொடர்பாக இந்திய விமான நிலையங்களின் ஆணையம் ஏற்கெனவே அளித்த வாக்குறுதிப்படி, உள்நாட்டு முனையத்தின் பெயர்ப்பலகையில் உடனடியாக கர்மவீரர் காமராஜரின் பெயரை இடம் பெறச்செய்யவேண்டும்.
![டிடிவி தினகரனின் டிவீட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-ttv-tweet-7209106_10032020140116_1003f_1583829076_46.jpg)
பெருமைக்குரிய பொதுவாழ்க்கையின் அடையாளமாக வாழ்ந்து மறைந்த காமராஜருக்கு அது மேலும் பெருமை சேர்ப்பதாக அமையும். உள்நாட்டு விமானங்களுக்குள் செய்யப்படும் அறிவிப்புகளிலும் 'காமராஜர் முனையம்' என்கிற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 'பெண் சிசுக்கொலைகளைத் தடுக்க எப்போது நடவடிக்கை' - டிடிவி தினகரன்