ETV Bharat / state

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவி மறைவுக்கு டிடிவி இரங்கல் - இரங்கல் செய்தி

சென்னை: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின்  மனைவி மறைவுக்கு அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

டிடிவி இரங்கல்
author img

By

Published : Apr 4, 2019, 7:27 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளதாவது, காலத்தால் அழியாத காவியப் பாடல்களைத் தந்து தமிழர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின், மனைவி திருமதி.கௌரவம்மாள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.

‘என்னை நாயகனாக உருவாக்கியதில் பட்டுக்கோட்டையாருக்கு முக்கிய பங்குண்டு. நான் உட்கார்ந்திருக்கும் நாற்காலியின் ஒரு கால் பட்டுக்கோட்டை’ என்று தம் நெருங்கிய நண்பரான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் புகழப்பட்டவர் மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரம். முதலமைச்சரான பிறகு, பட்டுக்கோட்டையாருக்கு அவரது குருநாதரான பாவேந்தர் பாரதிதாசன் பெயரில் அமைந்த விருதினை திருமதி.கௌரவம்மாளிடம் வழங்கி சிறப்பித்தார் எம்.ஜி.ஆர்.

ஜெயலலிதா, பட்டுக்கோட்டையார் பாடல்களை நாட்டுடமையாக்கி, அவரது குடும்பத்திற்கு நிதி வழங்கினார். இப்படி நம் இயக்கத்தின் அன்பைப் பெற்றிருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், அவர்களின் மனைவி திருமதி.கௌரவம்மாள் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 04.04.19

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின்  மனைவி மறைவுக்கு தினகரன் இரங்கல்..

அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,
  காலத்தால் அழியாத காவியப் பாடல்களைத் தந்து தமிழர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மனைவி திருமதி.கௌரவம்மாள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.
‘என்னை நாயகனாக உருவாக்கியதில் பட்டுக்கோட்டையாருக்கு முக்கிய பங்குண்டு. நான் உட்கார்ந்திருக்கும் நாற்காலியின் ஒரு கால் பட்டுக்கோட்டை’ என்று தம் நெருங்கிய நண்பரான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் புகழப்பட்டவர் மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரம். முதலமைச்சரான பிறகு, பட்டுக்கோட்டையாருக்கு அவரது குருநாதரான பாவேந்தர் பாரதிதாசன் பெயரில் அமைந்த விருதினை திருமதி.கௌரவம்மாளிடம் வழங்கி சிறப்பித்தார் புரட்சித்தலைவர். இதயதெய்வம் அம்மா அவர்கள், பட்டுக்கோட்டையார்  பாடல்களை நாட்டுமையாக்கி, அவரது குடும்பத்திற்கு நிதி வழங்கினார்.  இப்படி நம் இயக்கத்தின் அன்பைப் பெற்றிருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மனைவி திருமதி.கௌரவம்மாள் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.