ETV Bharat / state

“சென்னையில் புதிய திருப்பதி கோயில் கட்டுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உறுதுணையாக இருக்கிறார்” - TTD ஆலோசனை குழுத் தலைவர் சேகர் ரெட்டி

Tirumala Tirupati Devasthanam: சென்னை ராயப்பேட்டையில் 2 ஏக்கரில் ஏழைகளுக்கு இலவச திருமண மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்க உள்ளது என திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் ஆலோசனைக்குழுத் தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ttd-tamil-nadu-puducherry-states-advisory-committee-chairman-sekar-reddy-press-meet
சென்னை தியாகராய நகரில் புதிய திருப்பதி கோயில் - TTD தமிழக ஆலோசனைக்குழு தலைவர் சேகர்ரெட்டி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 7:30 PM IST

Updated : Sep 28, 2023, 7:51 PM IST

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் ஆலோசனைக்குழுத் தலைவர் சேகர் ரெட்டி செய்தியாளர் சந்திப்பு

சென்னை: திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் ஆலோசனைக்குழுத் தலைவராக 3வது முறையாக தொழில் அதிபர் சேகர் ரெட்டி நியமிக்கப்பட்டார். இதனையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோயில் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர ரெட்டி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சேகர்ரெட்டி பேசும்போது, "உளுந்தூர்பேட்டையில் பெருமாள் கோயில் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும். மேலும், தமிழகத்திலிருந்து திருப்பதி செல்லும் வழியில் பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதிகள் கட்டும் பணிகளும் தொடங்கப்படும். பக்தர்கள் 150 பேர் தங்கும் வகையில் சத்திரம் (விடுதி) அமைக்கப்படும்” என தெரிவித்தார்.

மேலும், “வரும் காலங்களில் ஏழை மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் திருமண உதவி செய்ய உள்ளோம். அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் 2 ஏக்கரில் ஏழைகளுக்கு இலவச திருமண மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்க இருக்கிறது. டி.வி.ஹெச் கட்டுமான நிறுவனம் சார்பில் திருப்பதி கோயில் கட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் காசோலை நிதியை நன்கொடையாக வழங்கப்பட்டது. தி.நகரில் திருப்பதி கோயில் விரைவில் கட்டப்படப்பட உள்ளது. இதுவரை 19 கோடி ரூபாய் நன்கொடை வந்துள்ளது.

மேலும், நன்கொடை வரும் என்று எதிர்பார்க்கிறோம். 35 கோடி ரூபாய் மதிப்பில் நிலம் வாங்கப்பட்டு உள்ளது. தற்போது, ஒன்றரை கிரவுண்ட் நிலம் வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் 6 மாதத்தில் 11 கிரவுண்ட் இடத்தில் பூமிபூஜை நடைபெற்று, அனைத்து வசதிகளுடன் கட்டுமானப்பணி தொடங்கும். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். அவருக்கு எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருப்பதி கோயில் பக்தர்கள் நடந்து வரும் காட்டுப் பாதையில், இதுவரை 6 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் சிறுத்தைகளை பிடிக்க வலை அமைத்துள்ளனர். 170 வனத்துறையினர், சிறுத்தைகளை இருக்கும் இடத்தை தேடி வருகின்றனர். சிறுத்தையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது” எனவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், முன்னாள் கமிட்டி உறுப்பினர்கள் கிருஷ்ணராவ், மோகன்ராவ், கார்த்திகேயன், அஜய், கிருஷ்ண ரெட்டி, அனில் ரெட்டி உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: போடிநாயக்கனூர் கொண்டரங்கி மல்லையா கோயில் பிரதோஷம்..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

Last Updated : Sep 28, 2023, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.