ETV Bharat / state

லாரிகள் வேலை நிறுத்த அறிவிப்பு - தடைக்கோரி வழக்கு

எல்.பி.ஜி. டேங்கர் லாரி வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் உள்ளிட்ட மூன்று எண்ணெய் நிறுவனங்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

லாரிகள் வேலை நிறுத்தம்- தடை கோரி வழக்கு
author img

By

Published : Jun 28, 2019, 5:56 PM IST

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஏப்ரல் மாதம் மாநில அளவிலான புதிய டெண்டர் நடைமுறை வெளியிட்டது. அதில், எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் 5,500 லாரிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்ட நிலையில், 4,800 லாரிகளுக்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விடுபட்ட 700 லாரிகளுக்கும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஜூலை 1ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தென்னிந்திய டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த போராட்டம் நடைபெற்றால் 22 கோடியே 93 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள் கிடைக்காத நிலை உருவாகும் எனக்கூறி, இந்த வேலை நிறுத்த போராட்டத்தை எதிர்த்து இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் தனித் தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

அதில், லாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டதிற்கு தடை விதிக்கக்கோரியும், எல்.பி.ஜி கேஸ் நிரப்பும் மையங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Intro:Body:எல் பி ஜி டேங்கர் லாரிகள் நடத்தும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஹிந்துஸ்தான், பாரத், இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாதம் மாநில அளவிலான புதிய டெண்டர் நடைமுறை வெளியிட்டது.

இதில் எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் 5,500 லாரிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்ட நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 4,800 லாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விடுபட்ட 700 லாரிகளுக்கும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் ஜூலை மாதம் 1 ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் 22 கோடியே 93 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள் கிடைக்காத நிலை உருவாகும் எனக்கூறி, இந்த வேலை நிறுத்த போராட்டத்தை எதிர்த்து இந்தியல் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியோர் தனி தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் .

அதில், டேங்கர் லாரிகளின் வேலை நிறுத்த போராட்டம் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் படி சட்ட விரோதமானது. எனவே ஜூலை 1 ம் தேதி நடைப்பெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

எல் பி ஜி கேஸ் நிரப்பும் மையங்கள் உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரியிருந்தனர். இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.