சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, திரையரங்குகளில் வெளியாகும் அதே சமயத்தில் வெளிநாடுகளில் ஓடிடியில் இப்படம் வெளியிடப்பட்டும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் 'சிம்புவின் ஈஸ்வரன் படத்தை திரையரங்கில் வெளியிடமாட்டோம்' என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளருடன் திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்பந்தம் போட்டிருந்தாலும் அதை நினைத்து கவலைப்பட வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் சிம்புவின் ஈஸ்வரன் படம் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.