ETV Bharat / state

மாணவர்களை மீட்க கட்டுப்பாட்டு அறைகளை உருவாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடுதான் - திருச்சி சிவா

உக்ரைனில் இருக்கும் மாணவர்களை மீட்க கட்டுப்பாட்டு அறைகளையும், வாட்ஸ் அப் குரூப்புகளையும் உருவாக்கி தகவல்களை திரட்டிய முதல் மாநில அரசு தமிழ்நாடு அரசுதான் என்றும், உக்ரைனில் தங்கியிருந்த தமிழ்நாடு மாணவர்கள் மீட்கும் பணி நிறைவடைந்ததாகவும் திருச்சி சிவா எம்.பி தெரிவித்துள்ளார்.

Trichy Siva mp says  Tamil Nadu Government  was first state government to set up control rooms and collect information to rescue students from ukraine மாணவர்களை மீட்க வாட்ஸ் அப் குரூப்புகளையும் உருவாக்கி தகவல்களை திரட்டிய முதல் மாநில அரசு தமிழ்நாடு அரசுதான் - திருச்சி சிவா trichy siva mp says about Tamil Nadu students  recoverd process from ukraine
Trichy Siva mp says Tamil Nadu Government was first state government to set up control rooms and collect information to rescue students from ukraineமாணவர்களை மீட்க வாட்ஸ் அப் குரூப்புகளையும் உருவாக்கி தகவல்களை திரட்டிய முதல் மாநில அரசு தமிழ்நாடு அரசுதான் - திருச்சி சிவா,trichy siva mp says about Tamil Nadu students recoverd process from ukraine
author img

By

Published : Mar 12, 2022, 1:20 PM IST

சென்னை: உக்ரைனில் சிக்கியிருந்த தமிழ்நாடு மாணவர்களை பத்திரமாக மீட்கும் பணிக்காக 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் அடங்கிய சிறப்புக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. அந்தக் குழு இந்திய வெளியுறவுத் துறையுடன் இணைந்து மேற்கொண்ட முயற்சிகள் மூலம் இதுவரை 1890 பேரை மீட்டுள்ளனர்.

இறுதியாக நேற்றிரவு வந்து சேர்ந்த 9 மாணவர்களுடன் தமிழ்நாடு அரசின் சிறப்புக்குழுவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம். அப்துல்லா மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் டெல்லியிலிருந்து இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று மாணவர்களுக்கு மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, "உக்ரைனில் தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிந்து வந்தனர். அங்கு நடைபெறும் போரின் காரணமாக அவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. டெல்லியில் கட்டளை மையம் அமைக்கப்பட்டு அங்கிருந்த மாணவர்களை தொடர்புகொண்டு அவர்கள் மீட்கப்பட்டனர்.

வாட்ஸ் ஆப் குழு உருவாக்கி மாணவர்களை மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டது. மேலும், தமிழ்நாடு மாணவர்கள் உக்ரைனில் இருந்த போது பல இன்னல்களை அனுபவித்தனர். தூதரக அதிகாரிகள் இந்தியில் மட்டுமே பேசினர் என இந்தியா திரும்பிய மாணவர்கள் குற்றஞ்சாட்டினார். இந்திய அதிகாரிகள் ஆங்கிலம் அல்லாமல் இந்தியில் மட்டுமே பேசியுள்ளனர். அதனைச் சரி செய்ய வெளியுறவுத் துறையிடம் கோரிக்கை விடுத்தோம்.

உக்ரைன் நாட்டின் அண்டை நாட்டிற்குச் சென்று தமிழ்நாடு மாணவர்களை மீட்பதாகத் திட்டமிடப்பட்டது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அந்த பணியை செய்வதால் அதற்கு அவசியம் இல்லை. தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகக் கூறியது. பின்னர் தமிழ்நாடு அரசின் குழு டெல்லிருந்தே ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டது. அதன் பிறகுதான் அதிக அளவிலான தமிழ்நாடு மாணவர்கள் உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பினர்.

தமிழ்நாடு அரசின் முயற்சியால் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாடு மாணவர்கள்
தாயகம் தமிழ்நாடு அரசின் முயற்சியால் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாடு மாணவர்கள் கடைசி தமிழ்நாடு மாணவர்கள் குழு..!

டெல்லியிலிருந்து சென்னை திரும்ப தமிழ்நாடு அரசு சார்பில் தனி விமானம் மூலமாக அவர்களை மீட்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக 9 தமிழ்நாடு மாணவர்கள் போர் நடந்து வந்த சுமி பகுதியில் சிக்கியதால் அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த மாணவர்களை மீட்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அவ்வப்போது எங்களுடன் ஆலோசித்து வந்தார். வெளியுறவுத்துறை அதிகாரிகளோடு பேசி சுமி பகுதியிலிருந்து மாணவர்களை வெளியேற்றுவதற்கான பேருந்து செலவு மற்றும் அடிப்படை வசதிகளுக்கான அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்று 9 மாணவர்களையும் இந்தியா வரவைத்து. இதனையடுத்து, சென்னை வந்த அவர்களை முதலமைச்சர் வரவேற்றார்.

தாயகம் திரும்பிய கடைசி தமிழ்நாடு மாணவர்கள் குழு..!

உக்ரைனில் தங்கியிருந்த தமிழ்நாடு மாணவர்கள் மொத்தமாக மீட்டு எடுக்கும் பணி நிறைவடைந்தது mission is accomplished என கூறினார். மேலும்,
31 மாணவர்கள் கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அங்கு அவர்கள் பாதுகாப்பாக இருந்து கொள்கிறோம் என கூறிவிட்தாக தெரிவித்தார்.

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களை ஸ்டாலின் வரவேற்றார்

அதனைத் தொடர்ந்து பேட்டியளித்த மாணவர்கள் உக்ரைனில் போர் பகுதியில் பல இன்னல்களை அனுபவித்து இந்தியா திரும்பினோம் என்றும், எங்களைப் பத்திரமாக மீட்க தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து எங்களை மீட்க உதவியதற்கு நன்றி என தெரிவித்தனர்.
மாணவர்களை மீட்க கட்டுப்பாட்டு அறைகளை உருவாக்கி தகவல்களை திரட்டிய முதல் மாநில அரசு தமிழ்நாடு அரசுதான் - திருச்சி சிவா

இதனிடையே, உக்ரைன் நாட்டில் சிக்கித்தவித்த தமிழ்நாடு மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க: Exclusive: உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை இளைஞர் நாடு திரும்ப விருப்பம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.