ETV Bharat / state

செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு பாராட்டு விழா...

தாம்பரத்தில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அரசாங்கத்தில் இருப்பவர்கள் ஒரு தலைபட்சமாக தங்கள் கருத்துகளை சொல்லாமல் எல்லோரும் சமம் என்ற கருத்தோடு பணியாற்ற வேண்டும் என கூறினார்.

செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு பாராட்டு விழா...
செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு பாராட்டு விழா...
author img

By

Published : Sep 29, 2022, 7:53 AM IST

சென்னை: கிழக்கு தாம்பரம் சங்கரா வித்யாலயா பள்ளியில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு பாராட்டு விழாவை பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநரான தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டார். பிரக்ஞானந்தாவிற்கு சதுரங்க சாதுர்ய மணி விருதும், ஒரு லட்ச ரூபாய் பணமும் வழங்கி கெளரவித்தனர்.

நிகழ்வில் பேசிய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, "படிப்பை விருப்பத்தோடு செய்ய வேண்டும், ஒருவித அழுத்தத்தின் காரணமாக செய்ய வேண்டாம். முழு முயற்சியோடு ஒரு வேலையை செய்யுங்கள் அதன் முடிவு எதுவாயினும் பரவாயில்லை. விளையாட்டில் நான் நன்றாக விளையாடி தோற்றாலும் கவலைப் படமாட்டேன், ஆனால் சரியாக விளையாடாமல் வெற்றி பெற்றாலும் மன நிறைவாக இருக்காது" என்றார்.

பின்னர் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், பிரக்ஞானந்தா விளையாட்டு வீரர் மட்டும் இல்லை. சிறந்த பேச்சாளரும் கூட என்று அவரை புகழ்ந்து பேசினார். ஒவ்வொருவருக்கு ஒரு கருத்து இருக்கும். அவரவர் கருத்தை கூறலாம். விவாதம் செய்யலாம், ஆனால் ஒருவர் கருத்தை திணிக்க கூடாது ஜனநாயக நாட்டில் என்றார்.

கடவுள் இல்லை என சிலர் கூறிவிட்டு யாருக்கும் தெரியாமல் கடவுளை வணங்கி விட்டு பொட்டு வைத்துக் கொண்டு அழித்து விடுவார்கள். நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது. கடவுள் நாம் முயற்சி செய்தால் நமக்கு தூண்டிவிடுவார். கடவுள் இருக்கிறார் என்பதற்காக மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பூஜை செய்து விட்டால் பாஸ் ஆக முடியாது, படிக்க வேண்டும். கடவுளை வழிபட்டால் நாம் படித்த கேள்வி தேர்வில் வரும், படித்தது மறக்காமல் இருக்கும்" என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குழந்தைகளுக்கு பிரக்ஞானந்தாவை பார்த்தவுடன் அவரை போல் சாதனையாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் வரும். மிக இளம் வயதில் இருந்தே அவர் சாதனையாளராக இருக்கிறார். மாணவர்களுக்கு ஒரு ரோல் மாடல், எல்லா விளையாட்டுகளிலும் குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் தற்காப்பு கலைகளை கற்றுத்தர வேண்டும். வெடிகுண்டு கலாச்சாரம் தவறான நடைமுறை, கருத்திற்கு கருத்தாக சொல்லலாம் பெட்ரோல் குண்டு போடக் கூடாது.

தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும். அரசாங்கத்தில் இருப்பவர்கள் ஒரு தலைபட்சமாக தங்கள் கருத்துகளை சொல்லாமல் எல்லோரும் சமம் என்ற கருத்தோடு பணியாற்ற வேண்டும்" என கூறினார்.

இதையும் படிங்க: தேவரியம்பாக்கம் சிலிண்டர் குடோன் தீ விபத்து - படுகாயம் அடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.