ETV Bharat / state

கருணாநிதி நினைவுநாள்: தலமரக்கன்று நடும் திட்டம் தொடங்கிவைப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, தலமரக்கன்று நடும் திட்டத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

கலைஞரின் நினைவு நாள்  கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள்  நினைவு நாள்  முதலமைச்சர் ஸ்டாலின் தலமரக்கன்று நடும் திட்டம்  மரக்கன்று நடும் திட்டம்  மரக்கன்று  சென்னையில் மரக்கன்று நடும் திட்டம்  சென்னை செய்திகள்  chennai news  chennai latest news  karunanithi memorial day  late ex cm karunanithi memorial day  memorial day  tree planting scheme  stalin tree planting scheme  tree planting scheme in chennai  cm stalin  tree planting scheme on late ex minister karunanithi memorial day
தலமரக்கன்று நடும் திட்டம்
author img

By

Published : Aug 7, 2021, 12:28 PM IST

சென்னை: கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை தலைமையிட வளாகத்தில் ஸ்டாலின் ஒரு லட்சம் தலமரக்கன்றுகள் (நாகலிங்க மரம்) நடும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

அறநிலையத் துறை, பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திவருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் ஒரு லட்சம் தலமரக்கன்றுகள் நடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கோயில்கள் தோன்றுவதற்கு முன்பிருந்தே நாகலிங்க மரம் இருப்பதால், அம்மரம் தலமரம் எனப் போற்றப்படுகிறது. திருக்கோயில்களில் அந்தந்தத் தலமரங்களான மாமரம், புன்னை, வில்வம், செண்பகம், மருதம் போன்ற மரங்கள் நட்டுப் பராமரிக்கப்படும்.

இத்தகைய பெருமைமிகு தலமரங்களைப் போற்றிப் பாதுகாக்கும் நோக்கில் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் ஒரு லட்சம் தலமரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை மூன்று மாதக் காலத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தலமரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கருணாநிதி நினைவிடத்தில் 'ஒரு இரகசியம்' - வெளியிட்ட வைரமுத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.