ETV Bharat / state

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, இன சான்றிதழை பதிவேற்ற அறிவுரை! - முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இன சான்றிதழை பதிவேற்றவும்

சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கு இன சான்றிதழ் மீண்டும் ஒருமுறை பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

trb
author img

By

Published : Nov 5, 2019, 7:40 AM IST

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்றுக்கான ஆன்லைன் வழி தேர்வு செப்டம்பர் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் நடத்தப்பட்டு அவர்களின் தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டன.

காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப ஒரு பணியிடத்திற்கு இரண்டு பேர் என்ற வீதத்தில் சான்றிதழ் சரிபார்க்க அழைக்கப்பட்டனர். அவர்களின் சான்றிதழ்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதிவரை பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பணியிடங்களுக்கு தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்தனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறுகளால் சாதி சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள் பதிவாகவில்லை. எனவே சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட நபர்களில் இனச் சான்றிதழ் பதிவேற்றம் செய்யாமலிருந்தால் வரும் 6ஆம் தேதி மாலை 6 மணிக்குள் மீண்டும் ஒரு முறை தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் இந்த சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டியவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சலிலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இசை ஆசிரியர்கள் நியமனம்; நவ., 2ஆம் தேதி ஆன்லைன் கலந்தாய்வு!

Intro:முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு
இன சான்றிதழ் பதிவேற்ற அறிவுரை

Body:முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு
இன சான்றிதழ் பதிவேற்ற அறிவுரை
சென்னை,

முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கு இன சான்றிதழ் மீண்டும் ஒருமுறை பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ,உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்றுக்கான ஆன்லைன் வழி தேர்வு செப்டம்பர் 27 ,28, 29 ஆகிய மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. அவர்களின் தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டது.
காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப ஒரு பணியிடத்திற்கு இரண்டு பேர் என்ற வீதத்தில் சான்றிதழ் சரிபார்க்க அழைக்கப்பட்டனர். அவர்களின் சான்றிதழ்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி முடிய பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பணியிடங்களுக்கு தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்தனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறுகளால் இனச் சான்று(சாதி சான்றிதழ்) பதிவேற்றம் செய்யப்பட்ட விபரங்கள் பதிவாகவில்லை.
எனவே சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட நபர்களில் இனச் சான்றிதழ் பதிவேற்றம் செய்யாமலிருந்தால் வரும் 6 ம் தேதி மாலை 6 மணிக்குள் மீண்டும் ஒரு முறை தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் இந்த சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டியவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சலிலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என அதில் கூறியுள்ளார்.

இயற்பியல், தாவரவியல் ,உடற்கல்வியியல், புவியியல் ,மனை அறிவியல் ,இந்திய கலாச்சாரம், அரசியல் அறிவியல் ,ஆங்கிலம், உயிர்வேதியியல் ,வணிகவியல் ,தமிழ்,மைக்ரோ பயோலாஜி, கணக்கு, வேதியியல், விலங்கியல், பொருளாதாரம், வரலாறு ஆகிய பாடங்களுக்கான தேர்வர்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்கள் 3824 பேரின் பட்டியலை பாடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரிய www.trb.tn.nic என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை பழங்குடியினர் நலத்துறை ஆகியவற்றிலுள்ள காலிப் பணியிடங்களுக்கும் இந்த தேர்வுப் பட்டியலில் இருந்து ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான காலிப்பணியிடங்களுக்கும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.