ETV Bharat / state

வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு 33 பேர் தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு! - சென்னை செய்திகள்

TN TRB Announcement : வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு தேர்வுச் செய்யப்பட்டுள்ள 33 பேரின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

TN TRB Announcement
வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு 33 பேர் தேர்வு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 11:14 AM IST

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (Teachers Recruitment Board) தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2019 - 2020 முதல் 2021 - 2022ஆம் ஆண்டுகளில் வட்டாரக் கல்வி அலுவலர் 33 காலிப்பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் 12.7.2023 வரை தேர்விற்கு ஆன்லைன் மூலம் 42 ஆயிரத்து 716 பேர் விண்ணப்பம் செய்தனர்.

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது இணைய வழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்க கோரியதன் அடிப்படையில், வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள், தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால், 13.7.2023 முதல் 17.7.2023 வரை திருத்தம் செய்ய (Edit Option) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட போட்டித் தேர்வை, கம்ப்யூட்டர் மூலம் 2023 செப்டம்பர் 10ஆம் தேதி நடத்தியதில், 35 ஆயிரத்து 403 பேர் தேர்வு எழுதினர். சிலர் தேர்வு எழுத வரவில்லை. வட்டாரக் கல்வி அலுவலருக்கான கம்ப்யூட்டர் தேர்வின் OMR (Optical Mark Reader) வழியில் நடத்திய போட்டித் தேர்வு முடிவுகள், ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் 9.11.2023 அன்று வெளியிடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், ஆவணங்களின் அடிப்படையில், விண்ணப்பதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ள பாடங்களுக்கு ஒரு பணியிடத்திற்கு 1:1.25 என்ற விகிதாச்சாரப்படி, 14.12.2023 (50 பணிநாடுநர்கள்) மற்றும் 4.1.2024 அன்று (ஒரு பணிநாடுநர்) சான்றிதழ் சரிபார்ப்பிற்கு மொத்தம் 51 பணிநாடுனர்கள் அழைக்கப்பட்டனர்.

தற்போது வட்டாரக் கல்வி அலுவலருக்கான பணித் தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, 33 பேர் இனச் சுழற்சிகளுக்கான பணிநாடுநர்களின் தற்காலிக தேர்வுப் பட்டியல் 1 (Provisional Selection List) வெளியிடப்பட்டுள்ளது" என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொங்கல் சிறப்பு பேருந்துகளில் இதுவரை 1.94 லட்சம் பேர் பயணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.