ETV Bharat / state

ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கண்டனம்! - Transport Minister Rajakannanpan

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய ஓய்வூதிய நிலுவைத் தொகையை ஓபிஎஸ் கூறியதால் வழங்கியதாக தெரிவித்திருப்பது, அவரது கீழ்த்தரமான அரசியலைக் காட்டுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

ஓ பன்னீர்செல்வம் கருத்துக்கு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கண்டனம்!

author img

By

Published : Jun 4, 2021, 2:08 PM IST

Updated : Jun 4, 2021, 4:42 PM IST

சென்னை:போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவையில் இருந்த ஓய்வூதியத் தொகையாக , 497 கோடியே 32 லட்சம் ரூபாய் 2,454 போக்குவரத்துப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும்; மேலும் அனைத்துப் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் உடனடியாக ஓய்வூதியத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்
அதனைத் தொடர்ந்து பேசிய அவர் பெண்களுக்காக இயக்கப்படும் இலவசப் பேருந்துகளால், ஏற்கெனவே இயங்கி வருகின்ற பேருந்துகள் குறைக்கப்படாது எனவும்; பிங்க்(pink) பேருந்துகள் என சொல்லப்படும் பெண்களுக்கான சிறப்பு பேருந்துகளை செயல்படுத்துவது குறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.அரசியலில் நானும் இருக்கிறேன் என்ற காரணத்திற்காகவே, ஓ.பன்னீர்செல்வம் வெற்று அறிக்கைகளை விட்டுக் கொண்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய நிலுவைத் தொகையை முன்னாள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறி வழங்கவில்லை எனவும்; தொழிலாளர்களின் நலன் கருதியே தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளதாகவும், ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்ததால் ஓய்வூதிய நிலுவை வழங்கப்பட்டதாக அவர் கருத்து தெரிவித்திருப்பது அவருடைய கீழ்த்தரமான புத்தியை காட்டுவதாகவும் தெரிவித்தார்.இதையும் படிங்க: 12ம் வகுப்பு பொதுத் தேர்வு விவகாரம்: விரைவில் அறிவிப்பு

Last Updated : Jun 4, 2021, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.