ETV Bharat / state

மீண்டும் பேருந்து சேவை?... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை - latest news

தமிழ்நாட்டில் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மீண்டும் பேருந்து சேவை?...
மீண்டும் பேருந்து சேவை?...
author img

By

Published : Jun 16, 2021, 1:12 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக மே மாதம் முழு ஊரடங்கும், தற்போது சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், அத்தியாவசியத் தேவையான பேருந்து வசதிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் கரோனோ தொற்றுப் பரவல் குறைவாக உள்ள சென்னை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய 27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகளை மட்டும் இயக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை இந்த வார இறுதியில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மாவட்டங்களில் 50 விழுக்காட்டுப் பயணிகளுடன் ஜுன் 21ஆம் தேதிக்குப் பின் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதனால் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சிவசங்கர் பாபா கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.