போக்குவரத்து துறையில் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு போக்குவரத்துப் பணியாளர் ஒன்றிணைப்பு அமைப்பு சார்பில் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இவ்வமைப்பின் சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், "போக்குவரத்துத் துறையில் உள்ள மூன்றாயிரம் பணியிடங்களில் ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
குறிப்பாக கண்காணிப்பாளர் பணியிடங்களில் சரிபாதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இரவு காவலர் பணியிடங்களில் 75 விழுக்காடு பணியிடங்கள் காலியாக உள்ளன. அதுமட்டுமின்றி, எழுத்தர் பணியிடங்களும் பெரும்பாலும் காலியாக உள்ளன.
இதன்காரணமாக, பணியிலுள்ள ஊழியர்களின் வேலைப்பளு கூடிக்கொண்டிருக்கிறது. பணிமூப்பின் அடிப்படையில் பதவி உயர்வுகளும் முறையாக வழங்கப்படாமல், காலியாகவுள்ள பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.
இதனை செய்ய வேண்டிய அலுவலர்கள் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்துக்கொண்டு மக்களுக்காக பணிபுரிய மறுக்கின்றனர். எனவே, தமிழ்நாடு அரசு தலையிட்டு இப்பிரச்னைகளுக்கு தீர்வுகாண முன்வர வேண்டும்" என்றார்.