சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. மேலும் வருகின்ற 23ஆம் தேதியிலிருந்து வங்கிகளில் தினந்தோறும் 20ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தது.
மேலும், செப்டம்பர் 30ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ள கால அவகாசமும் வழங்கியுள்ளது. இந்நிலையில் இது குறித்து பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. அரசுப் பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெறுவதற்கு எந்தத் தடையும் இல்லை. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பயணிகள் கொடுக்கும் பட்சத்தில் பெற்றுக் கொள்ளப்படும் எனவும்; வெளி நபர்கள், தனியார் நிறுவனங்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து வாங்க அனுமதி இல்லை எனவும்; பேருந்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நடத்துநர்கள் பெறக்கூடாது என சொன்னது, திரும்ப பெறப்பட்டதாக போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், விரைவில் போக்குவரத்து துறையில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். எந்தெந்த கோட்டங்களில் எவ்வளவு காலிப் பணியிடங்கள் உள்ளது என்ற தகவலை அனுப்பி வைக்குமாறு கோட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவை தொய்வின்றி நடைபெற ஏற்ற அளவில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2000 ரூபாய் நோட்டை வாங்குவதை மறுக்கக் கூடாது - கடைகளுக்கு RBI கவர்னர் வேண்டுகோள்