ETV Bharat / state

இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியான ரக்ஷிகா ராஜ்!

சென்னை: இந்தியாவில் முதல் திருநங்கை செவிலியாக ரக்ஷிகா ராஜின் பெயர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

transgender rashika raj
author img

By

Published : Oct 25, 2019, 10:10 PM IST

Updated : Oct 25, 2019, 11:14 PM IST

திருநங்கை ரக்ஷிகா ராஜ் செவிலி படிப்பை முடித்த பிறகு தமிழ்நாடு செவிலி கவுன்சிலில் தன்னை மூன்றாம் பாலின பெண் என பதிவு செய்யக் கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. திருநங்கைகளுக்கென்று செவிலியர் கவுன்சிலில் இடம் இல்லாததால் அவரால் செவிலி பணியில் சேரமுடியாத நிலை ஏற்பட்டது.

ரக்ஷிகா ராஜின் விண்ணப்ப பதிவு
ரக்ஷிகா ராஜின் விண்ணப்ப பதிவு

செவிலியர் கவுன்சிலில் தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "திருநங்கை ரக்ஷிகா ராஜ் கோரிக்கையை ஏற்று அவரை மூன்றாம் பாலின பெண்ணாக செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்துகொள்ளலாம். இந்தத் திருத்தம் விரைவில் கொண்டுவரப்படும்" என்று உத்தரவிட்டது.

எங்களையும் மனிதர்களாய் பாருங்க

ரக்ஷிகா ராஜின் நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு, இந்தியாவில் முதல் முறையாக செவிலியர் கவுன்சிலில் திருநங்கை என்று குறிப்பிட்டு சான்றிதழ் பெற்றுள்ளார். இந்தச் செய்தி சக திருநங்கைகளிடையே உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ரக்ஷிகா ராஜ் போன்று பலரும் படித்து முன்னேற முயற்சித்துவருகின்றனர்.

திருநங்கை ரக்ஷிகா ராஜ் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், "2018ஆம் ஆண்டில் செவிலி படிப்பை முடித்தேன். மார்ச் மாதம் பதிவு செய்ய தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலுக்கு வந்தபோது திருநங்கைகளுக்கான தனி படிவம் இல்லை. இது குறித்து நான் பதிவாளரிடம் கேட்டபோது எங்களுக்கு இது தொடர்பாக மசோதா இல்லை என்று தெரிவித்தார்.

மேலும் என்னை பெண் என்று சேர்த்துக்கொள்ள கூறினார். ஆனால், எனக்கு என் அடையாளத்தை விட்டுக்கொடுக்க விருப்பமில்லை. அதனால், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினேன். அதன்படி அக்டோபர் 17ஆம் தேதி நீதிபதி என்னை தற்காலிகமாகப் பெண் என்பதற்குள் திருநங்கை என்று பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் தற்போது செவிலியர் கவுன்சிலில் திருநங்கை என்று பதிவு செய்துள்ளேன். திருநங்கைகள் பலர் பலவற்றிற்காக போராடுகிறார்கள். அதற்கான வழியை நீங்கள்தான் காட்ட வேண்டும். எனக்கு தற்போது பாதி மகிழ்ச்சிதான். ஏனென்றால் அந்த மசோதா முழுமையாக வர வேண்டும்.

அதில் எங்களுக்கு இடஒதுக்கீடு போன்றவை வழங்க வேண்டும். சேர்க்கைப் படிவம் முதல் பணியில் சேரும்வரை திருநங்கைகளுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என திருநங்கை ரக்ஷிகா ராஜ் கோரிக்கைவிடுத்துள்ளார்.

Intro:Body:இந்தியாவில் முதல் முறையாக செவிலியராக பதிவு செய்துள்ள திருநங்கை.

ரஷ்சிகா ராஜ் என்னும் திருநங்கை செவிலியர் படிப்பை முடித்த பிறகும் திருநங்கைகளுக்கு என்று படிவத்தில் இடம் இல்லாததால் செவிலியர் பணியில் சேர முடியாமல் இருந்தது. இந்நிலையில் நீண்ட நாள் நீதிமன்ற போராட்டத்திற்கு பிறகு தற்போது முதல் முதலில் திருநங்கை என்று குறிப்பிட்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.

இதை பற்றி செவிலியர் திருநங்கை ரஷ்சிகா ராஜ் பேசுகையில், 2018 ஆம் ஆண்டில் செவிலியர் படிப்பை நான் முடித்தேன். பின்னர் மார்ச் மாதம் பதிவு செய்ய தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலுக்கு வந்த போது திருநங்கைகளுக்கு படிவத்தில் காலம் இல்லை. இதை பற்றி நான் பதிவாளரிடம் கேட்டபோது எங்களுக்கு இது தொடர்பாக அமண்ட்மெண்ட் இல்லை என்று தெரிவித்தார். மேலும் என்னை பெண் என்று சேர்த்து கொள்ள சொன்னார். ஆனால் எனக்கு என் அடையாளத்தை விட்டு கொடுக்க விருப்பம் இல்லை. அதனால் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினேன். அதன்படி அக்டோபர் 17 ஆம் தேதி நீதிபதி என்னை தற்காலிகமாக பெண் என்பதற்கு உள் திருநங்கை என்று பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் தற்போது நர்சிங் கவுன்சிலில் திருநங்கை என்று பதிவு செய்துள்ளேன்.

தொடர்ந்து அவர் பேசுகையில், திருநங்கைகள் பல பேர் பலவற்றிற்காக போராடுகிறார்கள். அதற்கான வழியை நீங்கள் தான் காட்ட வேண்டும் என தெரிவித்தார். எனக்கு தற்போது பாதி மகிழ்ச்சி தான். ஏனென்றால் அந்த அமண்ட்மெண்ட் முழுமையாக வர வேண்டும். அதில் எங்களுக்கு இடஒதுக்கீடு போன்றவை வழங்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் அட்மிஷன் முதல் பணியில் சேரும் வரை திருநங்கைகளுக்கு எந்த சிக்கலும் இல்லாமல் மத்திய - மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றேன் என தெரிவித்தார்.

Conclusion:
Last Updated : Oct 25, 2019, 11:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.