தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பலர் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்வது தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து, மது விலக்கு, அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் பல்வேறு ரகசிய தகவல்கள் அடிப்படையில் அதிரடி சோதனை நடத்தி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்கின்றனர். இந்நிலையில், ரயில்கள் மூலம் நடைபெறும் கடத்தல்களை தடுக்க, தமிழ்நாடு ரயில்வே காவல்துறையினர், ரயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து கூட்டாக ரயில் நிலையங்களில், ரயில்களில் பயணிக்கும் பயணிகள் இடமும் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பு ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயிலில் பயணித்த இரண்டு திருநங்கைகள் பயணிக்கும் பெட்டியில் சந்தேகத்திற்கு இடமாக பயணித்துள்ளனர். இதனைக் கவனித்த கொருக்குப்பேட்டை ரயில்வே பெண் காவலர் அம்மு அவர்களிடம் சோதனை நடத்திய போது அவர்களின் உடையில் மறைத்து வைத்திருந்த 45 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது!