தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, கம்ப்யூட்டர், தோட்டக்கலை ஆகிய பாடப்பிரிவுகளை பயிற்றுவிக்கும் விதமாக, 16,549 பகுதி நேர ஆசிரியர்களை கடந்த 2012ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களில் தற்பொழுது 12ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
ஒரு பள்ளியில் 100 மாணவர்களுக்கு மேல் இருந்தால், அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பாசிரியர்கள் பகுதி நேரமாக நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் அரை நாட்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களுக்குப் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் எனவும், பணி நிரந்தரம் அளிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பகுதி நேர சிறப்பாசிரியர்களின் கோரிக்கைகள் குறித்தும், பணியிட மாறுதல் கேட்ட சிறப்பாசிரியர்களின் விபரங்களையும் பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளது. அந்த விபரங்களின் அடிப்படையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிட மாறுதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
பகுதி நேர ஆசிரியர்கள் ஒருங்கிணைந்தக் கல்வி திட்டத்தில் பணியாற்றி வருவதால், அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை என, பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நாயகன் வாஜ்பாய் : 96ஆவது பிறந்தநாள்