தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இதனால், மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அனைத்து மருத்தவக் கல்லூரிகளுக்கும் மருத்துவ கல்வி இயக்குனர் ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், 'பயிற்சி மருத்துவர்களையும் இறுதியாண்டு மருத்துவம் பயிலும் மாணவர்களையும் கரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.