சென்னை : கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரயில் முன்பதிவு செய்யும் மையங்கள் செயல்படும் நேரங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, கிறிஸ்துமஸ் தினத்தன்று கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களின் சேவை ஞாயிற்றுக்கிழமை இயங்குவது போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்கள் செயல்படும் எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தெற்கு ரயில்வே, சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களும், கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான டிசம்பர் 25ஆம் தேதியன்று, ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படியே (காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே) இயங்கும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க : புறநகர் மின்சார ரயிலில் இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி!