ETV Bharat / state

சாலை விதிகள் மீறல்: போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை - போக்குவரத்து காவல்துறை

சென்னையில் போக்குவரத்து விதிமீறலைத் தடுக்கும் "ஜீரோ வைலேஷன்" நடவடிக்கை மூலம், ஒரேநாளில் 11,215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

Traffic Police will take action  Violation of Road Rules  chennai traffic police  சாலை விதிகள் மீறல்
சாலை விதிகள் மீறல்
author img

By

Published : Mar 24, 2022, 3:48 PM IST

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னையில் சாலை விபத்துகளைத் தவிர்க்கவும், வாகன நெரிசலின்றி போக்குவரத்து சீராக இருக்கவும், சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல் துறையினர், பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதன்படி, சென்னையில் உள்ள பல்வேறு சாலைகளில், சீட் பெல்ட் அணியாமல் செல்வது, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவது உள்ளிட்ட விதிமீறல்கள் குறித்து சோதனை நடத்தப்பட்டது.

கடந்த 22ஆம் தேதி, சென்னை பெருநகர் காவல் எல்லைக்குட்பட்ட 112 முக்கிய சந்திப்புகளில், எந்தவொரு வாகனமும் போக்குவரத்து விதிமுறைகளை மீறாத வண்ணம் "ஜீரோ வைலேஷன்" பகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டு, போக்குவரத்து காவல் துறையினரால் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Traffic Police will take action  Violation of Road Rules  chennai traffic police  சாலை விதிகள் மீறல்  போக்குவரத்து காவல்துறை  சாலை விதிகள் மீறல் போக்குவரத்து காவல்துறை
வீதி மீறினால் நடவடிக்கை

அன்று ஒரேநாளில், சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்ததற்காக 2,397 வழக்குகளும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக 1,253 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 173 இரு சக்கர வாகனங்கள், இழுவை வாகனம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த 790 நான்கு சக்கர வாகனங்களின் சக்கரங்கள் பூட்டப்பட்டு வழக்குப்பதியப்பட்டுள்ளது. பிற பிரிவுகளின்கீழ், சுமார் 6,602 வழக்குகள் என மொத்தம் 11,215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நடிகை கவுதமியின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.