சென்னை: உலகம் முழுவதும் நாளை மறுநாள் (டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறைகள் இருப்பதாலும் பலரும் சொந்த ஊர்களுக்குச் சென்று பண்டிகைகளை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாலும் சென்னையில் வசிப்போர் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல படையெடுத்துள்ளனர். இதானால், சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல சுமார் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் குவிந்து வருகின்றனர். மேலும், சில சொந்த வாகனங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்வதால் தாம்பரம் பெருங்களத்தூர் வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் காவல் துறையினர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இன்னும் அதிகப்படியான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல இருப்பதால் கூடுதலான அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சாலையில் திடீர் பள்ளம் - தலைகுப்புற கவிழ்ந்த வாகனங்கள்!