சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், பணியில் மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்குப் பணி நியமனங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
இதையடுத்து,பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்கங்களுக்கு, தொழிலாளர் நலத் துறை அழைப்பு விடுத்தது. அதன்படி, ஜன.3ஆம் தேதி முதல்கட்டப் பேச்சு நடைபெற்றது. அப்போது பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதை ஏற்றுக்கொள்ள மறுத்த தொழிற்சங்கங்கள் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்தன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் அடைந்தது. இதைத் தொடர்ந்து முதல் முதலாகச் சென்னை திருவான்மியூர் மாநகரப் பேருந்து பணிமனையில் வேலைநிறுத்த அறிவிப்பு ஒட்டப்பட்டு பேருந்துகள் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டது.
அடுத்த சில மணி நேரங்களில் சென்னை முழுவதும் மாநகரப் பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன. சென்னையில், இன்று காலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால்.
பயணிகள் பெரும்பலனோர், பேருந்தில் பயணிக்காமல், அவர்கள் சொந்த வாகனங்களிலும், மற்ற பொது போக்குவரத்து சேவைகளான மின்சார ரயில், மெட்ரோ ரயில், ஆட்டோக்கள் போன்றவற்றில் பயணித்தனர்.இதனால் சென்னை நகரமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.
போக்குவரத்து நெரிசல்: சென்னையில், தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்பட்டாலும், குறைந்த அளவே இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகச் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளான, அண்ணா சாலை, 100அடி சாலை, திருமங்கலம் சாலை, அரும்பாக்கம், ஈ.வே.ரா.பூந்தமல்லி நெடுஞ்சாலை, போன்ற பகுதிகளில் காலை 8 மணி முதலே போக்குவரத்து நெரிசல் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. மேலும் எப்போது பரபரப்பாகக் காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தால் இன்று போதிய பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
போக்குவரத்துத்துறை தகவல்: இந்நிலையில் தமிழகத்தில் காலை 1 மணி நிலவரப்படி மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 96.09% சதவீதம் பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 100 சதவீத பேருந்துகளும் இயக்கப்பட்டதாகப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் பேருந்துகள் முழுமையாக இயக்கம்.. ஆய்வுக்குப் பின் அமைச்சர் சிவசங்கர் தகவல்!