ETV Bharat / state

சென்னை மின்சார ரயில் சேவை ரத்து.. பேருந்து நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்.. போக்குவரத்து நெரிசலில் தத்தளிக்கும் தாம்பரம்.. - today latest news

tambaram traffic congestion: தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை - தாம்பரம் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் தாம்பரம் பேருந்து நிலையத்தில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

tambaram traffic congestion
ரயில் சேவை ரத்து.. பேருந்து நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்.. போக்குவரத்து நெரிசலில் தத்தளிக்கும் தாம்பரம்..
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 1:59 PM IST

ரயில் சேவை ரத்து.. பேருந்து நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்.. போக்குவரத்து நெரிசலில் தத்தளிக்கும் தாம்பரம்..

சென்னையில் மின்சார ரயில்களைப் பொறுத்தவரைக் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை கடற்கரை மார்க்கமாகத் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புறநகர் மின்சார ரயில்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாகத் தாம்பரம் முதல் சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று (அக் 31) ரத்து செய்யப்படுவதாக, தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது.

அந்த வகையில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் ரயில்கள் காலை 10.18 மணி முதல் பிற்பகல் 2.45 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் புறநகர் ரயில்கள் காலை 9.08 மணி முதல் பிற்பகல் 3.20 மணி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2.20 மணி வரையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இன்று (அக் 31) மின்சார ரயில்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை நகருக்குள் செல்வதற்குப் பொதுமக்கள் பேருந்துகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி வருகின்றது. அதிகப்படியான மக்கள் ஒரே நேரத்தில் பேருந்து நிலையத்தில் புகுந்ததால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாகத் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து ஆமை போல ஊர்ந்து செல்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதுபோன்று பராமரிப்பு பணிக்காக புறநகர் ரயில் ரத்து செய்யப்படும் நேரத்தில் தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்து கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: துபாயில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தல்... கடத்தல் தங்கத்தை கைமாற்ற முயன்ற விமான நிலைய ஒப்பந்த ஊழியர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.