ETV Bharat / state

முதலமைச்சரின் 'அரசியல் வாய்ஸ்' சண்முகம் - டி.ஆர். பாலு குற்றச்சாட்டு

சென்னை: திமுகவினர் அத்துமீறி நடந்துகொண்டது போல ஒரு கற்பனைச் சித்திரத்தைப் புனைய தலைமைச் செயலர் முயல்வது, அவருடைய சொந்த செயலாக தெரியவில்லை என டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

டி.ஆர்.பாலு, சண்முகம்
டி.ஆர்.பாலு, சண்முகம்
author img

By

Published : May 15, 2020, 3:55 PM IST

திமுகவின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் பொதுமக்களின் கோரிக்கைகள் மனுக்களாகப் பெறப்பட்டன. அந்த மனுக்களை மே 13ஆம் தேதி திமுக மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தலைமைச் செயலர் சண்முகத்தை நேரில் சந்தித்து ஒப்படைத்தனர்.

இந்நிகழ்விற்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர். பாலு, “தலைமைச் செயலர் எதிர்க்கட்சியினர் என்று கூட பார்க்காமல் எங்களை அவமதித்துள்ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், நாடாளுமன்ற உரிமை மீறலுக்கு எடுத்துச் செல்வோம்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து தலைமைச் செயலர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், திமுக குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார். திமுக அளித்த மனுக்களை முதலமைச்சர் பிரிவுக்கு அனுப்புவதாகவும் உறுதியளித்தார். மனுக்கள் மீதான நடவடிக்கைக்கு எவ்வளவு நாள்கள் ஆகும் என்ற கேள்விக்கு, குறிப்பிட்டு தேதியைக் கூற முடியாது எனக் கூறியதாகவும், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாகவும் விளக்கமளித்திருந்தார். அரசு ஊழியரான நான், திமுக உறுப்பினர்களை ஏன் அவமதிப்பு செய்ய வேண்டும் எனவும் கேள்வியெழுப்பினார்.

இதற்கு மறுமொழி கூறும் விதமாக, டி.ஆர். பாலு பதில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ”சண்முகம் பத்திரிகைகளில் திரித்துப் பேசுவது வருத்தமளிக்கிறது. யார் உண்மையைப் பேசுகிறார்கள்? யார் திரித்துப் பேசுகிறார்கள்? என்று மக்கள் புரிந்து கொள்வார்கள். தற்போது கோட்டை கொத்தளத்தில் விபத்தாக வந்து அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகள் போல் சண்முகம் விளக்கம் என்ற நிலையை விடுத்து, ’மறுப்பு’ என்ற அளவைப் பின்பற்றி அறிக்கை விடுத்திருப்பது கண்டனத்திற்குரியது.

தலைமைச் செயலர் அலுவலகத்தில் நாங்கள் அத்துமீறி நடந்து கொண்டது போல ஒரு கற்பனைச் சித்திரத்தைப் புனைந்திட முயற்சி செய்வது, அவரது சொந்தக் குரலாகத் தெரியவில்லை. அவருக்கு ஆணையிடும் முதலமைச்சரின் ’அரசியல் வாய்ஸ்’ போல் தெரிகிறது. தனது மறுப்பு அறிக்கையில் தலைமைச் செயலாளர் உரிய பதிலை அளிக்கவில்லை. அப்படிப் பதில் சொல்ல ஏதுமில்லை. மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் வகையில் அவர் நடந்துகொண்டது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆச்சரியம் அளித்திடக் கூடியது. எந்த வகையிலும் விளக்கி சமாதானம் செய்திடவோ, நியாயப்படுத்திடவோ முடியாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக நாளிதழில் வெளியான கட்டுரை
திமுக நாளிதழில் வெளியான கட்டுரை

இதனிடையே, திமுக தலைவர்கள் - தலைமைச் செயலர் சண்முகம் இருவருக்கும் இடையில் நடைபெற்ற வார்த்தை போரிற்கு வலுசேர்க்கும் விதத்தில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் இன்று கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், ”எடப்பாடி கூட்டத்தில் சேர்ந்து, கொழுப்பு கூடிவிட்டது தமிழ்நாட்டின் தலைக்கனச் செயலர் சண்முகத்திற்கு ஜூலையோடு பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், பதவி நீட்டிப்பு ஆசையில் இவ்வாறு நடந்துகொள்கிறார். ஆட்சிகள் மாறும்; காட்சிகள் மாறும். வாலாட்டிக்கொண்டிருக்கும் இன்னும் பல ’சண்முகங்களின்’ கணக்கும் எடுக்கப்பட்டுதான் வருகிறது” எனக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

இதையும் படிங்க: சீசன் சமயத்தில் வாழ்வாதாரம் இழந்த குற்றால வியாபாரிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.