1. 'காதலை மறுத்த பெண்' கல்லூரி வளாகத்தில் கொடூரக்கொலை
கேரள மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் பைஜு என்ற இளைஞர் காதலிக்க மறுத்த பெண்ணை கொடூரமாகக் கொலைசெய்துள்ளார்.
2. கழுத்தை நெரித்துள்ளீர்கள் - விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
டெல்லி நகரத்தையே கழுத்தை நெரிப்பதுபோல், உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறீர்கள் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
3. 15,000 மியான்மர் மக்கள் இந்தியாவிற்குள் குடிபெயர்வு - ஐநா தலைவர்
உள்நாட்டு மோதல் காரணமாக மியான்மர் நாட்டைச் சேர்ந்த 15 ஆயிரம் மக்கள் இந்தியாவுக்குள் குடிபெயர்ந்துள்ளதாக ஐநா சபைத் தலைவர் கூறியுள்ளார்.
4. 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் - அக்டோபர் 4ஆம் தேதி வழங்க முடிவு
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அக்டோபர் 4ஆம் தேதி முதல் பள்ளிகளில் வழங்கப்படும் என அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
5. உள்ளாட்சித் தேர்தல்: கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வாக்காளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதிச்சீட்டு பெற்றவர்களைத் தவிர வேறு யாரும் வாக்குச்சாவடியில் நுழைய அனுமதியில்லை என ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
6. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
தமிழ்நாட்டில் இன்று பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
7. ஆன்லைனில் பழங்குடியின சாதி சான்றிதழ் - தமிழ்நாடு அரசு
பழங்குடியின மக்களுக்கு ஆன்லைன் வாயிலாகச் சாதி சான்றிதழ் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
8. தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் - புதிய காவல் ஆணையர்கள் நியமனம்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆவடி காவல் ஆணையரகத்தின் சிறப்பு அலுவலராக ஏடிஜிபி ரவி, தாம்பரம் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அலுவலராக ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
9. கரோனா காலத்திலும் ரத்த தான முகாம் மூலம் 1,18,363 யூனிட் ரத்தம் சேகரிப்பு!
அரசு ரத்த வங்கிகள் மூலம் ஏப்ரல் 21 முதல் ஆகஸ்ட் 21 வரை 778 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 1,18,363 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது.
10. அரசியல் தலைவர்களிடம் பணம் மோசடி செய்தவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்து சிறையிலுள்ள நபரை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் முடிவுசெய்துள்ளனர்.