ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

top ten news at 9 pm  top ten  top ten news  latest news  tamilnadu latest news  tamilnadu news  top news  news update  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்  9 மணி செய்திச் சுருக்கம்  இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Sep 30, 2021, 10:13 PM IST

1. மக்கள் பள்ளி திட்டம் - வீடு தேடிவரும் ஆசிரியர்கள்

தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள இடத்தில் சென்று கற்பிக்கும்விதமாக, மக்கள் பள்ளி திட்டத்தை, பள்ளிக் கல்வித் துறை அறிமுகப்படுத்த உள்ளது.

2. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4 முதல் நேரடி வகுப்பு

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டை சேர்ந்த மாணவர்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என கல்லூரிக்கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

3. அடிப்படை வசதி கோரி நூதனப் போராட்டம்

அடிப்படை வசதிகளை செய்து தராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு நூதனப் முறையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4. கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் - சபாநாயகர் அப்பாவு கடும் எதிர்ப்பு

3ஆவது, 4ஆவது உலைகளிலிருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே சேமிக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

5. இரு விரல் பரிசோதனை: மகளிர் ஆணையம் கண்டனம்

விமானப்படை பயிற்சி கல்லூரியில், பெண் அலுவலருக்கு நடந்த பாலியல் துன்புறுத்துதல் வழக்கில், தடைசெய்யப்பட்ட இரு-விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

6. அக். 8இல் ராமோஜி ஃபிலிம் சிட்டி திறப்பு: இது உலகின் மிகப்பெரிய திரைப்பட நகரம்!

உலகின் மிகப்பெரிய திரைப்பட நகரமான ராமோஜி ஃபிலிம் சிட்டி அக்டோபர் 8ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் கோவிட்-19 பாதுகாப்பு விதிகளுக்குள்பட்டு அனுமதிக்கப்படுவார்கள்.

7. பாகம்பரி மடத்தின் அடுத்த மடாதிபதி யார்?

பாகம்பரி மடத்தின் மடாதிபதியான மஹந்த் நரேந்திரகிரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது அடுத்த மடாதிபதியாக பல்பீர்கிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

8. தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட கன்னட நடிகை

பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகை சௌஜன்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

9. இளையராஜா இசையில் உருவாகும் ‘நினைவெல்லாம் நீயடா’!

இளையராஜா இசையில் ஆயிரத்து 417ஆவது படமாக ஆதிராஜன் இயக்கும் 'நினைவெல்லாம் நீயடா' படம் உருவாகிறது.

10. SRH vs CSK: ஹைதராபாத் பேட்டிங்; பிராவோ ரிட்டன்!

ஹைதராபாத் - சென்னை அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.