ETV Bharat / state

9 மணி செய்திச்சுருக்கம் top 10 news @ 9 PM - செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்தி சுருக்கம்

top ten news at 9 am  top ten news  top ten  top news  latest news  tamilnadu latest news  tamilnadu news  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச்சுருக்கம்  9 மணி செய்திச்சுருக்கம்
செய்தி சுருக்கம்
author img

By

Published : Aug 3, 2021, 9:27 PM IST

1. மறைமலை அடிகளார் பேரன் சிவகுமாருக்கு பணி நிரந்தரம்

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்காலிகமாக பணியாற்றி வரும் மறைமலை அடிகளாரின் பேரன் சிவகுமாருக்கு பணி நிரந்தரம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

2. பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை கால நீட்டிப்பு

தமிழ்நாடிலுள்ள தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பிக்க ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

3. சட்டப்பேரவையில் கலைஞர் படம் - பாஜக வரவேற்பு

சட்டப்பேரவையில் கலைஞர் படம் வைக்கப்பட்டுள்ளதை, அரசியல் காரணங்களையும் தாண்டி கலைஞர் தமிழ் பற்றாளர் என்ற வகையில் பாஜக வரவேற்கிறது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

4. பொதுப்போக்குவரத்து மூலம் இளைஞர்கள் இந்தியா முழுவதும் பயணம் - காரணம் என்ன?

கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற இரண்டு இளைஞர்கள் புதுச்சேரியிலிருந்து இருந்து பொதுப்போக்குவரத்து ஊர்திகளான ரயில், பேருந்து மூலம் இந்தியா முழுவதும் பயணம் செய்து ராமேஸ்வரம் வந்தடைந்தனர்.

5. சுதந்திர தின விழாவில் இந்திய ஒலிம்பிக் போட்டியாளர்கள்; பிரதமர் திட்டம்!

டெல்லி செங்கோட்டையில் நடக்கும் சுதந்திர தின விழாவில் இந்திய ஒலிம்பிக் போட்டியாளர்களைச் சிறப்பு விருந்தினர்களாக பிரதமர் மோடி அழைக்கவுள்ளார்.

6. காவலரை மிரட்டிய அமைச்சர் சேகர் பாபுவின் உறவினர்

தடையை மீறி திறக்கப்பட்டிருந்த மதுபான பாரை அடைக்கக் கூறிய காவலரை, அலைபேசியில் அழைத்து மிரட்டிய அமைச்சர் சேகர் பாபுவின் உறவினர் பேசும் ஆடியோ பதிவு வெளியாகி வைரலாகி வருகிறது.

7. திருமணம் மீறிய உறவு - 12 ஆண்டுகள் காத்திருந்து பலி தீர்த்த இளைஞர்

காஞ்சிபுரத்தில் சகோதரியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபரை 12 ஆண்டுகளுக்குப் பிறகு பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த இளைஞரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

8. ஊடக சர்ச்சைக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லை - நடிகை ஷில்பா ஷெட்டி

ஆபாசப் பட விவகாரத்தில் கைதான ராஜ் குந்த்ராவின் வழக்கில், தன்னையும் தனது குழந்தைகளையும் தொடர்புபடுத்தாதீர்கள் எனக்கூறி ஷில்பா ஷெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

9. நடிகர் சூர்யா வெளியிட்ட'கூகுள் குட்டப்பா'வின் ஃபர்ஸ்ட் லுக்!

'கூகுள் குட்டப்பா' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது சூர்யா வெளியிட்டுள்ளார்.

10. அர்ஜென்டினாவை வீழ்த்தி சாதனை படைக்குமா இந்திய மகளிர் ஹாக்கி அணி!

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி முதன்முறையாக அரையிறுதிக்குச் சென்றுள்ள நிலையில், நாளைய போட்டி இந்திய ஹாக்கி வரலாற்றில் சிறப்புமிக்க போட்டி என்றாலும் தகும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.