1. சங்கரய்யாவை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்போம் - கே. பாலகிருஷ்ணன்
சங்கரய்யாவின் நூற்றாண்டை சிபிஎம் பல்வேறு நிகழ்ச்சி மூலம் கொண்டாட இருக்கிறது, சங்கரய்யாவின் வாழ்வின் சிறப்பு குறித்தும் இளைஞர்களிடம் உணர்த்தப்படும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2. மதுரையில் மெட்ரோ ரயில் - தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
3. 1,594 மனுக்களில் 1,188 மனுக்கள் மீது விசாரணை நிறைவு - தமிழ்நாடு காவல்துறை
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 1,594 மனுக்களில் 1,188 மனுக்கள் மீது விசாரணை நடத்தி முடித்துள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
4. 95 விழுக்காடு காவலர்களுக்கு தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ளது - சங்கர் ஜிவால்
95 விழுக்காடு காவலர்களுக்கு கரோனா தடுப்பூசியின் முதல் தவணை போடப்பட்டுள்ளதாகச் சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
5. மதம், மொழி, சாதி பெயரில் மக்களை பிளவுப்படுத்த பாஜக நினைக்கிறது - கே.எஸ் அழகிரி
மதம், மொழி, இனம், சாதி என பலவற்றின் பெயரில் மக்களை பிளவுபடுத்த பாஜக நினைக்கிறது எனக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
6. காஞ்சிபுரத்தில் ஆன்மிக தலங்களை இணைக்கும் வகையில் புதிய ரயில் சேவை!
காஞ்சிபுரத்தில் ஆன்மிக தலங்களை இணைக்கும் வகையில் புதிய ரயில் சேவை தொடங்க பரிந்துரைக்கப்படும் என ரயில்வே வாரியத்தின் தென் மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
7. குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக குடியரசு தலைவரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார்.
8. திருவள்ளூரில் மனைவியிடம் அத்துமீறிய நபரை அடித்துக் கொன்றவர் கைது
மனைவியிடம் அத்துமீறிய அடையாளம் தெரியாத நபரை அடித்து கொன்றவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
9. ஏடிஎம்க்கு வரும் அப்பாவிகளை ஏமாற்றி கொள்ளையடித்த பலே திருடன் கைது
திண்டுக்கல்: ஏடிஎம்க்கு வரும் அப்பாவிகளிடம் பணத்தை கொள்ளையடித்த நபரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
10. கவர்ந்திழுக்கும் இடையழகி கத்ரீனா கைஃப்!
பாலிவுட் குயின் கத்ரீனா கைஃப் இன்று (ஜூலை 16) தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.