ETV Bharat / state

காலை 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @7Am - முக்கியச் செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச்சுருக்கம்..

top ten news at 7 am  top news  top ten  top ten news  latest news  tamilnadu latest news  tamilnadu news  செய்திச்சுருக்கம்  காலை 7 மணி செய்திச்சுருக்கம்  etvbharat  ஈடிவி பாரத்  முக்கியச் செய்திகள்  தமிழ்நாடு செய்திகள்
செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 15, 2021, 7:06 AM IST

1. காமராஜர் பிறந்தநாள்: நெறிமுறைகளைப் பின்பற்றி கொண்டாடுமாறு அறிவுரை

காமராஜர் பிறந்த நாளை நெறிமுறைகளைப் பின்பற்றி கொண்டாடுமாறு அரசு அறிவித்துள்ளது.

2. நீதிமன்ற அவதூறு: முன்பிணை கோரிய ஹெச். ராஜாவின் வழக்கு ஒத்திவைப்பு

நீதிமன்ற அவதூறு வழக்கில் முன்பிணை கோரிய பாஜக மூத்தத் தலைவர் ஹெச். ராஜாவின் வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

3. கே.சி. வீரமணி வேட்புமனு தொடர்பான வழக்கு பரிசீலிக்கப்படும் - நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் எனவும், மனுதாரரின் மனுவை மீண்டும் பரிசீலிப்பதாகவும் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

4. ஒரு வாளியுடன் சென்று நீதிமன்றத்தை தூய்மைப்படுத்த உள்ளேன் - தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அதிரடி

ஒரு வாளி, துப்புரவு உபகரணங்களுடன் சென்று நீதிமன்ற வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

5. ஜிஎஸ்டி ஆணைய உத்தரவு ரத்து: குடியிருப்புச் சங்கங்கள் மகிழ்ச்சி

குடியிருப்புச் சங்கங்கள் வசூலிக்கும் சந்தா தொகை ஏழாயிரத்து 500 ரூபாய்க்கு மேலிருந்தால் முழுமையான வரி செலுத்த வேண்டும் என்ற ஜிஎஸ்டி ஆணைய உத்தரவை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6. ககன்யான் திட்டம்: இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி

ககன்யான் விண்கலத்தைத் தாங்கிச் செல்லும் விகாஸ் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

7. நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்க வேண்டும் - காவரி விவகாரத்தில் கமல் கருத்து

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகாவின் குரலாக அல்லாமல், நீதியின் குரலாக ஒலிக்க வேண்டும் என மநீம தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

8. கோபத்தில் ராகுல் வெளிநடப்பு: நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் பரபரப்பு

டோக்லாம் எல்லையில் இந்திய - சீனப் படையினரின் மோதல் குறித்து விவாதிக்க வேண்டிய தன்னுடைய கோரிக்கை ஏற்கப்படாததால் நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திலிருந்து ராகுல் காந்தி வெளிநடப்புச் செய்துள்ளார்.

9. டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகினார் ஃபெடரர்!

மூட்டு வலி காரணமாக ஜூலை 23ஆம் தேதி தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இருந்து விலகுவதாக முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் தெரிவித்துள்ளார்.

10. விஷ்ணு விஷாலின் எப்ஐஆர் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

விஷ்ணு விஷால் தற்போது அறிமுக இயக்குநர் மது ஆனந்த் இயக்கத்தில் எப்ஐஆர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.