1. விஜயகாந்தை நேரில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.
2. ’தமிழர்களை சாதிரீதியாக கூறுபோடுவதை அனுமதிக்க முடியாது’ - கொந்தளிக்கும் டிடிவி தினகரன்!
கொங்கு நாடு குறித்த விவாதம் காரசாரமாக நடந்துவரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக் குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஒடுக்க வேண்டும் என்றும், தமிழர்களை சாதிரீதியாகக் கூறுபோடுவதை அனுமதிக்க முடியாது எனவும் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.
3. டீசல் விலை உயர்வால் குறைந்தளவு படகுகளே இயக்கம்: மீன் வரத்து குறைவு
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விடுமுறை நாளான இன்று ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்க குவிந்தனர்.
4. ஆற்றில் வந்த 10 அடி மலைப்பாம்பு: அலேக்காக தூக்கிய இளைஞர்
குமரியில் ஆற்றில் வந்த மலைப்பாம்பை துணிச்சலுடன் ஆற்றில் இறங்கி பிடித்த இளைஞரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
5. வாகனத் தணிக்கையில் நிற்காமல் சென்று சந்தேகத்தைக் கிளப்பிய கார்: போலீசார் தீவிர விசாரணை
பெருந்துறையில் காவல் துறையினரின் வாகனத் தணிக்கைக்கு நிற்காமலும், பண்ணாரி பகுதியில் காவலர்களைக் கண்டு வழியை மாற்றியும் பயணித்த காரை சந்தேகத்தின் அடிப்படையில் வனத்துறையினரும் காவல் துறையினரும் கண்காணித்து வருகின்றனர்.
6. கேரளாவை இழிவுபடுத்தும் முயற்சி - பினராயி
கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடைபெறுவதாக கீடெக்ஸ் ஆயத்த ஆடை நிறுவன பிரச்னை தொடர்பாக அம்மாநில முதலைமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
7. குறைத்தீர்ப்பு அலுவலரை நியமித்த ட்விட்டர் நிறுவனம்
இந்திய அரசின் அறிவுறுத்தலின் படி புதிய குறை தீர்ப்பு அலுவலரை ட்விட்டர் இந்தியா நிறுவனம் நியமித்துள்ளது.
8. பழனியில் கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
பழனி தனியார் விடுதியில், 3 பேர் கும்பலால் கேரள பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்க சென்ற போதும், காவல்துறையினர் அதனை ஏற்க மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கேரள டிஜிபி, தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
9. கரோனா நிலவரம் - ஒரே நாளில் 41,506 பேருக்கு தொற்று உறுதி
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 41,506 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
10. கெத்து காட்டிய மெஸ்ஸி - கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா
28 ஆண்டுகளுக்குப் பின் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை அர்ஜென்டினா அணி கைப்பற்றியது.