ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் top 10 news@ 5 PM - கண்ணீர் அஞ்சலி

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

செய்திச் சுருக்கம்
Top ten news
author img

By

Published : Jul 20, 2021, 5:07 PM IST

'சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் தக்க நடவடிக்கை'

சமூக வலைதளம் மூலமாக அவதூறு பரப்புபவர்களை அரசு தொடர்ந்து கண்காணித்துவருகிறது, ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துப் பதிவிட வேண்டும் என சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சிறு கவனக்குறைவு: அந்தரத்தில் பறந்து நொறுங்கிய புதிய கார்!

தெலங்கானாவில் ஷோரூமிலிருந்து காரை டெலிவரி எடுக்கவந்த வாடிக்கையாளர், தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதில், கார் முதல் தளத்திலிருந்து கீழே விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பெகாசஸ் சர்ச்சை: திருணமூல் காங்கிரஸ் எம்பி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்

மத்திய அமைச்சர்கள் இருவர், எதிர்க்கட்சித் தலைவர்கள் மூவர், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள் என இந்தியாவைச் சேர்ந்த 300 நபர்களின் மொபைல் குறிவைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மதுசூதனனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரால் பரபரப்பு

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்றுவரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைந்ததாக, கொடைக்கானலில் அதிமுகவினர் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை சமூக வலைதளங்களில் பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ்வழிப் பாடநூல் - திண்டுக்கல் ஐ. லியோனி

உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ்வழிப் பாடநூல் அச்சிடும் பணி தொடங்கவுள்ளதாகத் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி தெரிவித்துள்ளார்.

தர்மபுரியில் பிரமாண்ட ஜவுளிப் பூங்கா அமைக்க நடவடிக்கை: அமைச்சர் காந்தி தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஜவுளிப் பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்காச்சோளத்திலிருந்து பைகள் தயாரிக்க நடவடிக்கை - அமைச்சர் மெய்யநாதன்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக மக்காச்சோளத்திலிருந்து பைகள் தயாரிக்க ஊக்கமளிக்கப்படும் எனச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

ஆவின் புதிய நியமனங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு - அமைச்சர் நாசர்

ஆவின் நிறுவனத்தில் முறைகேடான நியமனங்கள் ரத்துசெய்யப்பட்டு டிஎன்பிஎஸ்சி மூலமாகத் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் உள்ள குடும்பத்திடம் முருகன், நளினி பேச்சு

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், நளினி ஆகியோர் வெளிநாடுகளில் உள்ள முருகனின் சகோதரி, தாயிடம் காணொலி காட்சி மூலம் இரண்டாவது முறையாகப் பேசியுள்ளனர்.

சிங்கிள் ஷாட்... சிங்கிள் நாயகி: ஹன்சிகாவின் புதிய படம் ஆரம்பம்

ஒரே ஷாட்டில் ஒரே கதாபாத்திரத்தை வைத்து எடுக்கும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படத்தில் ஹன்சிகா நடிக்கிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.