ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top ten news @11 am
top ten news @11 am
author img

By

Published : Jun 27, 2021, 11:16 AM IST

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக குணமடைந்த 57,944 பேர்

இந்தியாவில் நேற்று (ஜூன்.26) ஒரே நாளில் 57 ஆயிரத்து 944 பேர் குணமடைந்ததாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்து குண்டு வெடிப்பு.. ஜம்முவில் பதற்றம்..

ஜம்மு விமான நிலையத்தில் இன்று அதிகாலை இரண்டு முறை குண்டு வெடித்ததால் பதற்றம் நிலவுகிறது.

'மின்வெட்டுக்கு சாக்குபோக்குக் காரணம் சொல்லக் கூடாது' - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

மின்வெட்டு பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டுமே தவிர, சாக்குபோக்குக் காரணம் சொல்லக் கூடாது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

'போதிய விலை கிடைக்கவில்லை...' - மலர் விவசாயிகள் வேதனை

திண்டுக்கல் மாவட்டத்தில் சம்பங்கிப்பூக்கள் பயிரிட்டிருக்கும் விவசாயிகள், போதிய விலை கிடைக்காததால் மலர்களைப் பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

காக்கா கறி சாப்பிடுற எங்களுக்கு கரோனா வராது...' தடுப்பூசி போட மறுத்த நரிக்குறவர் இன மக்கள்

காகம், கொக்கு ஆகிய பறவைகளின் இறைச்சியை உண்ணும் தங்களுக்கு கரோனா தொற்று வராது என நரிக்குறவர் இன மக்கள், தடுப்பூசி செலுத்த வந்த அலுவலர்களிடம் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள் மரத்துக்கு போலீஸ் பந்தோபஸ்து போட்ட டிஐஜி

குரங்குகளிடம் இருந்து ஆப்பிள் மரங்களை காக்க காவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

'மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்தவேண்டும்'

அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

அனல் மின் நிலையங்கள் சுற்றுச்சூழலுக்கு சவாலாக இருந்தன - கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை அறிக்கை

நிலக்கரி அனல் மின் நிலையங்கள் சுற்றுச்சூழலுக்கு சவாலாக இருந்தன என்று கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் நியாயவிலைக்கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாகப் புகார்

கருங்குளம் கிராம நியாய விலைக்கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மதுரை கோட்ட 3 ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தேசிய விருது!

மதுரை கோட்டத்தில் பணியாற்றும் மூன்று ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள், தேசிய அளவிலான 'உத்கிருஷ்ட சேவா' விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.