ETV Bharat / state

5 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 5 PM

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச்சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச்சுருக்கம்
ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Feb 20, 2021, 5:03 PM IST

1 மிசோரம், அருணாச்சலப் பிரதேசத்தின் மாநில தினம்: பிரதமர் வாழ்த்து!

டெல்லி: மிசோரம், அருணாச்சலப் பிரதேச மாநில தினத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2 திஷா ரவிக்கு ஆதரவாக கிரேட்டா தன்பெர்க் ட்வீட்!

டெல்லி: டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பான டூல்கிட்டை பகிர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுற்றுச் சூழலியல் ஆர்வலர் திஷா ரவிக்கு ஆதரவாக சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் ட்வீட் செய்துள்ளார்.

3 சஞ்சய் தத் விடுதலை குறித்து கேள்வி எழுப்பிய மும்பை உயர் நீதிமன்றம்

குண்டு வெடிப்பு வழக்கில் கைதான சஞ்சய் தத் எவ்வாறு முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்? அதற்காக பின்பற்றப்பட்ட நடைமுறைகள் என்ன என்பது குறித்து விளக்கமளிக்க மகாராஷ்டிர தகவல் ஆணையத்திற்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 புதுச்சேரியில் பெரும்பான்மை யாருக்கு? வரும் 22ஆம் தேதி முடிவு

புதுச்சேரி: சட்டப்பேரவையின் ஒரு நாள் சிறப்பு கூட்டம் வரும் 22ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என சட்டப்பேரவை செயலளார் முனிசாமி அறிவித்துள்ளார்.

5 அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் இறங்கும் இந்தியா - சீனா!

டெல்லி: கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ், தீப்சாங் ஆகிய பகுதிகளிலிருந்து ராணுவ படைகளை திரும்பபெறுவது குறித்து இந்தியா, சீனா நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கவுள்ளது.

6 உயர்கல்வியில் தமிழ்நாடு முன்னணி - பால்வளத்துறை அமைச்சர் பெருமிதம்

உயர்கல்வியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

7 'அது நானில்லைங்க': சசிகலாவிற்கு ஆதரவு சுவரொட்டிக்கு மறுப்பு சுவரொட்டி!

தேனி: ஆண்டிபட்டியில் சசிகலா ஆதரவு ஒட்டப்பட்ட சுவரொட்டிக்கு, 12 நாள்களுக்குப் பிறகு மறுப்பு தெரிவித்து அதிமுக பிரமுகர் வேல்முருகன் சுவரொட்டி ஒட்டியள்ளார்.

8 சென்னையில் கரோனா சிகிச்சை பெறுவோர் 1,623 பேர்!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தமாக ஆயிரத்து 623 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

9 அத்திவரதர் வைபவத்திற்கு அரசு நிதி ஒதுக்கவில்லை - கோயில் நிர்வாகத்தின் பதிலால் பக்தர்கள் அதிர்ச்சி!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்திற்கு 44 கோடி நிதி ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அரசு நிதி ஏதும் ஒதுக்கீடு செய்யவில்லை என்ற கோயில் நிர்வாகத்தின் பதிலளால் பக்தர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

10 பயிர் கடன் தள்ளுபடிக்கு லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய அலுவலர்கள்!

கோவை: பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு லஞ்சம் பெற்ற கூட்டுறவு சங்க அலுவலர்கள் செல்வராஜா, ஆறுமுகம் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று ( பிப் 19 ) இரவு கைது செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.