ETV Bharat / state

ஈடிவி பாரத் 9 மணி செய்தி சுருக்கம் Top 10 news @9pm

author img

By

Published : Dec 4, 2020, 9:17 PM IST

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்தி சுருக்கம்...

Top 10 news
டாப் 10 செய்திகள்

பைடன் அரசில் முக்கியப் பங்காற்றவுள்ள விவேக் மூர்த்தி!

அமெரிக்க வாழ் இந்தியரான விவேக் மூர்த்திக்கு அமெரிக்க சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா தடுப்பூசிகளை சேமிக்க குளிர்சாதன வசதி!

அடுத்தாண்டு, தடுப்பூசி தயாராக இருக்கும் பட்சத்தில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் அதனை எப்படி சரியான நேரத்தில் எடுத்துச் செல்வது என்பது குறித்த திட்டத்தை அரசு வகுத்தாக வேண்டும். இந்தியாவில் கரோனா தடுப்பூசி விநியோகத்தில் உள்ள சவால்கள் குறித்து காண்போம்.

NZ vs WI, 1st Test: ‘வில்லியம்சன் பேட்டிங் வேறுலகம் சேர்ந்தது’ - இயன் பிஷப் பாராட்டு!

நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இரட்டை சதமடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

விவசாயிகள் போராட்டம் - டில்ஜித் தோசஞ் உடன் கைகோர்த்து கங்கனாவை சாடும் மிகா சிங்!

எனக்கு கங்கனா மீது மிகுந்த மரியாதை உள்ளது. அவர் அலுவலகம் அரசாங்கத்தால் இடித்து நொறுக்கப்பட்டபோது கூட அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தேன். ஆனால், அது தவறு என இப்போது உணர்கிறேன்.

பிஎட் படிப்பில் சேர இணையவழி கலந்தாய்வு!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளங்கலை கல்வியியல் (பிஎட்) பட்டப்படிப்பில் சேர்வதற்கு வரும் 10ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும், அவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'மாஸ்டர் விஜய்க்கு நன்றி'- கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜூ மாஸ்டர் படக்குழு மற்றும் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார். அப்போது, ஒ.டி.டி, போன்ற தளங்களில் திரைப்படங்களை வெளியிடுவது உகந்தது அல்ல என தாம் ஏற்கனவே கூறியுள்ளதையும் அவர் நினைவுக் கூர்ந்தார்.

அண்ணா பல்கலை. மாணவர்களின் நலன்கருதி அரசு நல்ல முடிவை எடுக்கும் - நீதிபதிகள் நம்பிக்கை

அண்ணா பல்கலைகழகத்தின்கீழ் உள்ள கல்லூரிகள் மற்றும் அதில் பயிலும் மாணவர்களின் நலன்கருதி பல்கலைக்கழக வேந்தர் மற்றும் தமிழ்நாடு அரசு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கில் உரிய முடிவு எடுப்பார்கள் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை நம்புவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது: கடற்படை தளபதி

இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமை கமாண்டர் அதுல் குமார் ஜெயின் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு - கனடா பிரதமருக்கு இந்தியா எச்சரிக்கை

டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியாவிலுள்ள கனடா தூதரை அழைத்து இந்தியா எச்சரித்துள்ளது.

மாநில அரசுக்கு எதிராக கர்நாடகாவில் நாளை பந்த்!

கன்னட அமைப்புகள் டிசம்பர் 5ஆம் தேதி (சனிக்கிழமை) மாநிலம் தழுவிய பந்த் அறிவித்துள்ளன. இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கடைகளை அடைக்க வேண்டாம் என அம்மாநில முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.