ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM

author img

By

Published : Jun 22, 2020, 8:59 PM IST

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 9PM
Top 10 news @ 9PM

உயிரிழப்பு விவரத்தை வெளியிட்டுள்ள சீனா

கல்வான் மோதலில் சீன ராணுவ படைப்பிரிவு தலைவர் ஒருவர் உயிரிழந்ததாக ராணுவ ரீதியான பேச்சுவார்த்தையின்போது அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது.

'கரோனா போரில் வெற்றியடைந்தே ஆக வேண்டும்' - அமைச்சர் பாண்டியராஜன்!

சென்னை: அடுத்த ஒன்பது நாள்களில் கரோனா போரில் வெற்றியடைந்தே ஆகவேண்டும், இதற்கு மேலும் ஊரடங்கு நீட்டிப்பது சாத்தியமில்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

மதுரையில் முழு ஊரடங்கு: எதற்கு அனுமதி? எதற்கு அனுமதியில்லை?

மதுரை: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த செயல்களுக்கு அனுமதி, எந்தெந்த செயல்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இ-பாஸ் கேட்டு மின்வாரிய ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் : மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ்

சென்னை : அடையாள அட்டையைக் காண்பித்தும் இ-பாஸ் இல்லை என மின்வாரிய ஊழியரைத் தாக்கிய காவலர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்டு மாநில மனித உரிமை ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

'மணல் குவாரி வேண்டாம்' - ஆற்றில் இறங்கி போராட்டம் செய்த மக்கள்!

தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்செனம்பூண்டியில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, பொதுமக்கள் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மும்பை: கடலில் மூழ்கிய 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

மும்பை: பதின்பருவத்தைச் சேர்ந்த இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்ததாகத் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் 6 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

தேனி: கேரளாவில் இருந்த தமிழ்நாடு குழந்தைத் தொழிலாளர்கள் 6 பேர் மீட்கப்பட்டு தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்திய - சீன எல்லையில் இடிந்து விழுந்த பாலம்!

கேர்சின்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்திய - சீன எல்லைக்கு அருகேயுள்ள பாலம் அதிக பாரத்தை ஏற்றிச் சென்ற கனரக லாரி கடக்கும்போது இடிந்து விழுந்தது.

சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற ராதிகா ஆப்தே

நடிகை ராதிகா ஆப்தே இயக்கியுள்ள 'ஸ்லீப் வாக்கர்ஸ்' குறும்படம் சர்வதேச குறும்பட விழாவில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்திற்கு தேதி முடிவு செய்யவில்லை: பிசிசிஐ

ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் இந்த வாரம் நடக்கவிருந்த நிலையில், எந்தத் தேதியில் கூட்டம் நடக்கும் என்பது பற்றி முடிவு செய்யவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.