ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9AM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-9am
top-10-news-at-9am
author img

By

Published : Jun 29, 2020, 8:58 AM IST

Updated : Jun 29, 2020, 9:04 AM IST

அனந்த்நாக்கில் என்கவுன்ட்டர்: வீழ்த்தப்பட்ட 3 பயங்கரவாதிகள்!

ஜம்மு காஷ்மீர்: அனந்த்நாக் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

வெட்டுக்கிளித் தாக்குதலை 'இயற்கைப் பேரிடர்'ஆக அறிவிக்க காங். வலியுறுத்தல்!

டெல்லி: வெட்டுக்கிளித் தாக்குதலை இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. அதேபோல், காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளது.

'கடனையும் வாங்கிவிட்டு சீனாவைப் புறக்கணிக்க கேட்டுக்கொள்வதா?' - பாயும் ஆம் ஆத்மி

டெல்லி: சீனாவிடமிருந்து மத்திய அரசு 5,700 கோடி ரூபாய் கடன் வாங்கியது. தற்போது மக்களிடையே சீனாவைப் புறக்கணிக்குமாறு கேட்கிறது என ஆம் ஆத்மி கட்சியின் முன்னணித் தலைவர் சஞ்சய் சிங் மத்திய அரசை சாடியுள்ளார்.

கல்யாணம் நடத்தி 100 பேருக்கு கரோனா பரப்பிய குடும்பம் - ரூ.6.26 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!

ஜெய்ப்பூர்: கோவிட்-19 கட்டுப்பாடுகளை மீறி, பகட்டான வகையில் திருமணத்தை நடத்திய குடும்பத்துக்கு ரூ.6.26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

கூட்டுறவு வங்கிகளை ஆர்.பி.ஐ. கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல அவசரச் சட்டம் - எஸ்டிபிஐ எதிர்ப்பு!

சென்னை: கூட்டுறவு வங்கிகளை ஆர்.பி.ஐ. கட்டுப்பாட்டில் கொண்டுசெல்ல அவசரச் சட்டத்தால் மாநில உரிமைகள் பறிபோவதைத் தடுக்க தமிழ்நாடு அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

'6ஆவது முறையாக என்னைச் சாகடித்துவிட்டார்கள்' - பின்னணிப் பாடகி எஸ். ஜானகி வேதனை

சென்னை: ஆறாவது முறையாக என்னைச் சாகடித்துவிட்டார்கள் என்று பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி வேதனை தெரிவித்துள்ளார்.

தயாராக உள்ள லாக்கப் - ஓடிடி தளத்தில் வெளியாவதாகத் தகவல்!

சென்னை: நடிகர் நிதின் சத்யா தயாரிப்பில், இயக்குநர் ஜெயம் ராஜாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்கியுள்ள க்ரைம் திரில்லர் படம் லாக்கப், ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோவிட்-19 சிகிச்சைக்குத் தடுப்பூசி: சீன நேஷனல் பயோடெக் குழுமம் அறிவிப்பு

பெய்ஜிங்: கோவிட்-19க்கு புதிய தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும் இது கிட்டத்தட்ட 1,120 தன்னார்வலர்களிடம் அதிக அளவு ஆன்டிபாடிகளை உருவாக்கி உள்ளது எனவும் சீனா நேஷனல் பயோடெக் குழுமம் தெரிவித்துள்ளது.

2007 டூ 2013 - தோனி கேப்டன்சியில் ஏற்பட்ட மாற்றங்கள்

2007ஆம் ஆண்டுக்கும் 2013ஆம் ஆண்டுக்கும் நடுவில் தோனியின் கேப்டன்சியில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன என்று முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

டெய்லர் கொலைக்கு நீதி: லூயிஸ்வில் பூங்காவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு!

கென்டக்கி மாகாணத்தில் லூயிஸ்வில்லில் உள்ள ஒரு பூங்காவில் சனிக்கிழமை(ஜூன் 27) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பிரோனா டெய்லரின் மரணத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியிருந்த இடத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Last Updated : Jun 29, 2020, 9:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.