ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9AM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-9am
top-10-news-at-9am
author img

By

Published : Jun 26, 2020, 8:51 AM IST

மம்தா பானர்ஜியிடம் வெள்ளை அறிக்கை கோரும் பாஜக!

கொல்கத்தா: ஜூலை 31ஆம் தேதிவரை பொதுமுடக்கம் (லாக்டவுன்) நீட்டிக்கப்பட்டது ஏன்? இது குறித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

'பயண விவரங்களை குறித்துக் கொள்ளுங்கள்'- பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: பொதுமக்கள் தங்களின் பயண விவரங்களை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும் எனக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்திய-திபெத் எல்லைப் படையில் மேலும் 8 பேருக்கு கரோனா!

டெல்லி: இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையில் புதிதாக எட்டு பேருக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

டெல்லியில் 24 மணி நேரத்தில் 3,390 பாதிப்பு, 64 உயிரிழப்பு!

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பாளர்கள் புதிதாக 3,390 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 2,175 ஆக உள்ளது.

விவசாயிகளின் 50 ஆண்டுகால கனவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி

ஈரோடு: திருவாச்சிப் பகுதியில் சுமார் ஆயிரத்து 652 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் அவினாசி அத்திக்கடவு குடிநீர்த்திட்ட நீரேற்று மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார்.

உள்நாட்டில் களிமண்ணால் சிலை செய்ய முடியாதா? - நிர்மலா சீதாராமன்

சென்னை: வீட்டில் பயன்படுத்தும் தினசரி பொருள்களான சோப்பு டப்பா முதல் ஊதுபத்தி வரை இந்தியாவில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருள்களை மக்கள் பயன்படுத்துவதே ‘ஆத்ம நிர்பார் பாரத்’ திட்டத்தின் நோக்கம் என நிதியமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

வெளிநாட்டு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஜெய்சங்கர்!

ருவாண்டா, எஸ்டோனியா நாடுகளின் அமைச்சர்களுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பத்திரமா இருங்க, வெளியே வராதீங்க! - சகோதரனை இழந்த தயாரிப்பாளர் வேண்டுகோள்

கரோனா தொற்று காரணமாக தனது மூத்த சகோதரர் உயிரிழந்ததை அடுத்து அனைவரையும் பாதுகாப்பாக இருக்கமாறு தயாரிப்பாளர் தனஞ்செயன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

'திருப்புமுனையாக அமைந்தது கபில்தேவின் கேட்ச்தான்' - 1983 ஃபைனல் குறித்து கீர்த்தி ஆசாத்

கபில்தேவ் பிடித்த கேட்ச்தான் 1983 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் போக்கை மாற்றியது என அப்போதைய இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கீர்த்தி ஆசாத் நினைவுகூர்ந்துள்ளார்.

'ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி' - பாகிஸ்தான் பிரதமர் பேச்சால் சர்ச்சை!

கராச்சி: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நாடாளுமன்றத்தில் பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை தியாகி எனப் புகழாரம் சூட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.