1.திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் காலமானார்!
கரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் உயிரிழந்தார்.
2.வேடந்தாங்கல் வதந்திகள்... விளக்கமளித்த வனத் துறை!
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் இடம் குறைக்கப்படுவதாக ஊடகங்களில் வந்த செய்திகள், உண்மைக்குப் புறம்பானவை எனத் தமிழ்நாடு வனத் துறை விளக்கமளித்துள்ளது.
3.லேஸ், குர்குரே அடைக்கப் பயன்படும் நெகிழிப் பைகளுக்குத் தடை!
கடைகளில் விற்கப்படும் லேஸ், குர்குரே போன்றவற்றை அடைக்கப் பயன்படும் நெகிழிப் பைகளைத் தயாரிக்கவும், விற்பனைசெய்யவும் தமிழ்நாடு அரசு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
4.'நான் மசூதியை இடிக்கவில்லை கோயிலின் எச்சங்களைத்தான் இடித்தேன்'
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ராம் விலாஸ் வேதாந்தி, தான் மசூதியை இடிக்கவில்லையெனவும் கோயிலின் எச்சங்களைத்தான் இடித்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
5.ஊரடங்கால் உப்புக்கஞ்சி குடிக்கும் காஷ்மீர் நாடோடி சமூக மக்கள்!
ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த குஜ்ஜர் பகர்வால் என்னும் நாடோடி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஊரடங்கால் வேலை, வருமானம் இன்றி உப்புக்கஞ்சியைக் குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
6.காஷ்மீர்: 4ஜி இணைய வேகத்தை மீட்டெடுக்க சிறப்புக்குழு கூடவில்லை!
ஜம்மு - காஷ்மீரில் 4ஜி இணைய வேகத்தை மீட்டெடுப்பது குறித்து, ஆராய உயர்மட்டக்குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லையென ஊடக வல்லுநர்களின் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
7.வடகிழக்கு மாநிலங்களில் பரவும் கரோனா!
நாட்டில் உள்ள எட்டு வடகிழக்கு மாநிலங்களிலும் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
8.நிழலுலக தாதாவுடன் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட நேபாள முன்னாள் அமைச்சரின் மகன்!
வெளிநாட்டுப் பணத்தைக் கடத்திய குற்றத்திற்காக நேபாள சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டு முன்னாள் அமைச்சரின் மகன் யூனுஸ் அன்சாரி, நிழல் உலக தாதா தாவூத் இம்ராஹிமுடன் சேர்ந்து பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
9.'காட்மேன்' குழுவினருக்கு நிபந்தனை முன் பிணை வழங்கி உத்தரவு!
'காட்மேன்' இணையதளத் தொடர் இயக்குநர் பாபு யோகேஸ்வரனுக்கும், தயாரிப்பு நிறுவன பிரதிநிதி இளங்கோவுக்கும் நிபந்தனை முன் பிணை வழங்கி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10.கரோனாவுக்குப் பின் கிரிக்கெட்டில் அமலுக்கு வரும் ஐசிசி விதிமுறைகள்!
கரோனாவுக்குப் பின் கிரிக்கெட் போட்டிகளில் அமலுக்கு வரவுள்ள விதிமுறைகளை ஐசிசி அறிவித்துள்ளது.